Tuesday, May 28, 2013
இலங்கை::கிளிநொச்சியில் இருந்த புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் வடமாகாண இலங்கை மின்சார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயகத்தில் இருந்து இருப தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் போரிட்டு மாண்டனர். இவர்களுக்கான துயிலும் இல்லங்கள் வடக்கு கிழக்கு எங்கும் அமைக்கப்பட்டிருந்தன. துயிலும் இல்லங்களை புலிகள் ஆண்டு தோறும் மாவீரர் தினத்தில் அவ்விடத்தில் தீபம் எற்றி வந்தனர்.
கிளிநொச்சியைக் கைபற்றிய சில நாட்களிலேயே புலிகளின் கிளிநொச்சி துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் தமது புல்டோசரால் அழித்தனர்.
புலிகளின் துயிலும் இல்ல்ம் இருந்த காணிகளில் மக்கள் சென்று குடியேறலாம் என்று இராணுவத்தினர் அறிவித்த பொழுதும் அப்பகுதிகளில் யாரும் குடியேறவில்லை. தொடர்ந்தும் மயான அமைதியுடன் காடுகளாக அப்பகுதிகள் இருந்தன. இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடத்தில் இராணுவமுகாம் அமைத்து இருந்தனர்.
இந்நிலையில் கிளிநொச்சி புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை வடக்கு மாகாண சபையின் இலங்கை மின்சார சபைக்கு அரசாங்கம் ஒதுங்கியுள்ளது.
No comments:
Post a Comment