Tuesday, May 28, 2013
இலங்கை::கராச்சி: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணம் கராச்சியில் சுங்க அதிகாரியாக பணிபுரிபவரின் மகன் முஸ்தபா (13). இன்டர்நெட், சாட்டிங்குக்கு அடிமையான சிறுவன், பேஸ்புக்கில் தெரியாதவர்களுடன் நட்பு கொண்டு அடிக்கடி உரையாடி வந்தான். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ முகாம் அருகே பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவனை ஒரு கும்பல் கடத்தியது. கராச்சிக்கு வெளியே ஓரிடத்தல் சிறுவனை அடைத்து வைத்திருந்த மர்ம கும்பல், முஸ்தபாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம்.
அவனை உயிருடன் திரும்ப அனுப்ப ரூ.5 கோடி தரவேண்டும். இல்லையெனில் அவனை கொன்று விடுவோம் என்று மிரட்டியது. அதிர்ச்சி அடைந்த முஸ்தபாவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பின், முஸ்தபாவின் பெற்றோரை கடத்தல் கும்பல் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு வந்தது. போலீசார் அறிவுரைப்படி பெற்றோரும் கடத்தல் கும்பலிடம் கேட்ட பணத்தை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக கூறி வந்தனர். கடத்தல் கும்பல் பேசியதை போலீசார் பதிவு செய்தனர்.
அந்த கும்பலின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் நேற்று முஸ்தபாவை அடைத்து வைத்துள்ள இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறுவன் முஸ்தபாவை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:
Post a Comment