Tuesday, May 28, 2013

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்புகளால் 2 வாரத்தில் 350 பேர் பலி!

Tuesday, May 28, 2013
பாக்தாத்::ஈராக்கில் சன்னி - ஷியா பிரிவினருக்கு இடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. ஈராக் அதிபர் நூர் அல் மாலிக் பதவி விலக கோரி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஈராக்கில் அமெரிக்க படை வாபஸ் ஆனதில் இருந்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாக்தாத்தில் நேற்று ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் கார் குண்டுகளை வெடிக்க செய்தனர். 
 
கிழக்கு ஹபிபியாவில் 2 இடங்களில் கார் குண்டு வெடித்ததில் 12 பேர் இறந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். பாக்தாத்தில் நேற்று ஒரே நாளில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 66 பேர் பலியானார்கள். கடந்த 2 வாரத்தில் நடந்த தாக்குதலில் இதுவரை 350 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பெரும் பதற்றம் நீடிக்கிறது. நிலைமையை சமாளிக்க ராணுவத்தினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment