Sunday, May 26, 2013

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!


Sunday, May 26, 2013
இலங்கை::கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும் அந்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24 ஆம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்..

கொழும்புத் துறைமுகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீயினால் அழிவடைந்த பொருட்களின் உரிமையாளர்கள் 43 பேர் இதுவரை துறைமுக அதிகார சபையிடம் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் பிரதி முகாயைாளர் நலீன் அபோன்சு தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் ஆகியன துறைமுகத்தின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவுற்றதன் பின்னர் தீயினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து கணக்கிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தீக்கிரையாகியுள்ள பொருட்கள் குறித்து இதுவரை எவ்வித கணக்கெடுப்பும் முன்னெடுக்கப்படவில்லை.தீக்கிரையான பொருட்களின் உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நலீன் அபோன்சு குறிப்பிட்டார்.

இதற்காக துறைமுக அதிகார சபையின் சட்டம் மற்றும் சுங்க சட்டம் ஆகியவற்றை பின்பற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்..
 

No comments:

Post a Comment