Sunday, May 26, 2013

சுவிஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டுக்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பிரதான அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக புலிகளின் தாக்குதல் பிரிவான ஹிட் ஸ்கொட் நிலை நிறுத்தம்: திவயின!

Sunday, May 26, 2013
இலங்கை::சுவிஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டுக்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பிரதான அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக புலிகளின் தாக்குதல் பிரிவான ஹிட் ஸ்கொட் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் ஒன்று சுவிஸ் பொட்போல் காவற்துறையினருக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக சுவிஸ் நாட்டின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவினர், ஜெனிவாவுக்கு செல்லும் இலங்கை அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளையும் அவசரமான நிலையில் செயற்படக் கூடிய வெளிநாட்டு சாரதி மற்றும் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
நோர்வேயில் உள்ள புலிகளுக்கு எதிரான குழு, இந்த தாக்குதல் அணி குறித்த தகவல்களை சுவிஸ் காவற்துறையினருக்கு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போது இந்த தாக்குதல் அணி நிலை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை அமைச்சர்கள் தங்கும் ஜெனிவாவில் உள்ள இண்டர்கொண்டிநேட்டல் விடுதிக்கு சென்று புலிகளின் புலனாய்வாளர்கள் அமைச்சர்களின் பயணங்கள் குறித்த தகவல்களை திரட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள சுவிஸின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment