Sunday, May 26, 2013
இலங்கை::தேர்தல் மூலம் அரசாங்கத்தை தோற்கடித்து பதவிக்கு வர முடியாது என்பதை எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உட்பட பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உள்ள அரசாங்கத்தை எதிர்க்கும் சகல அரசியல்கட்சிகளும் அமைப்புகளும் நன்கு உணர்ந்துள்ளன.
இதனால் எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான சதித் திட்டத்தை புலிகளை ஆதரிக்கும் அரச சார்பற்ற அமைப்புகளின் நிதி உதவியுடன் மேற்கொள்வதற்கு இப்போது திரைமறைவில் செயற்பட்டு வருவதாக அரசாங்கத்துக்கு இரகசிய தகவல்கள் கிடைத்து ள்ளன.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் வருடாந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல், யுத்தக் குற்றச்சாட்டுகளை தொனிப்பொரு ளாக வைத்து இலங்கை அரசாங்கத்தின் அதிகார த்தை பலவீனப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகளும் படுதோல்வியில் முடிவடைந்தன. இதனால், கடந்த மார்ச் மாதத்திலும் ஜெனீவாவில் மேற்கொள் வதற்கு எடுத்த இரண்டாவது முயற்சியும் எதிர்பார்த் தளவு அழுத்தங்களை இலங்கை அரசா ங்கத்தின் மீது ஏற்படுத்தவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பதவி நீக்கம் செய்யப் பட்டது தொடர்பாகவும் நாட்டில் ஆர்ப்பாட்ட ங்களை நடத்தி அரச எதிர்ப்பு செயற்பாட்டினை நாடெங்கிலும் மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சி யும் எதிர்பார்த்த அளவு வெற்றியை எதிர்க் கட்சி களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. அதை யடுத்து மின்சார கட்டண உயர்வை ஒரு காரணமாக வைத்து பொது வேலை நிறுத்தத்தை நடத்தி இன்று எதிர்க்கட்சிகள் மூக்குடைபட்ட நிலையில் செய்வ தறியாது குழப்பத்தில் மூழ்கியிருக்கின்றன.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியலில் மக்கள் அபிமானத்தைப் பெறும் திறமை இல்லாவிட்டாலும் அவர் அரசியல் திருகு தாளங்களைப் புரிவதில் ஒரு நல்ல திறமைசாலி.
எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலை முன் வைத்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங் களைச் செய்தால் அது சிறுபான்மை மக்களின் ஆதரவையும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை யும் ஏற்படுத்தி நாட்டில் ஒரு பெரும் அரசியல் சர்ச்சையை உண்டுபண்ணும் என்பதை நன்கு அறிந்திருக்கும் தந்திரசாலியான ரணில் விக்கிரம சிங்க, வடமாகாண சபைத் தேர்தலையும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தையும் மைய மாக வைத்து, அரசாங்கக் கூட்டணிக்குள்ளேயே கருத்து மோதல்களை ஏற்படுத்த தற்போது முயற்சி களை செய்து வருகிறார்.
13வது திருத்தப் பிரேரணையை மாற்றம் செய்யாத நிலையில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதே வேளையில் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
வடபகுதியில் மக்கள் செல்வாக்குமிக்க அமைச் சராக இருக்கும் கடற்றொழில் நீரியல்வள அமை ச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அரசியல் அமை ப்பின் 13வது திருத்தத்திற்கு அமையவே தேர்தல் நட த்தப்பட வேண்டுமென்றும் இதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென்றும் கூறி யிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை தீர்மா னங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சரவையின் பதில் பேச்சா ளரான அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா 13ஆவது திருத்தம் நீக்கப்படாமலேயே வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந் தார்.
13ஆவது திருத்தச் சட்டமூலத்தை இரத்து செய் வதா? அல்லது தொடர்ந்தும் சட்டப் புத்தகத்தில் வைத்திருப்பதா? என்பது குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவே ஒரு இறுதி முடிவை எடுக்க முடியும். இதுதான் யதார்த்த பூர்வமான உண்மை.
ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கூட்டாளி கட்சி களின் தலைவர்களும் இந்த உண்மையை நன்கு உணர்ந்திருக்கின்ற போதிலும் பாராளுமன்ற தெரிவு க்குழுவுக்கு வந்து 13ஆவது திருத்தப் பிரேரணை தொடர்பான சர்ச்சை குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு முன்வந்திருக்க வேண்டும்.
அதற்கு பதில் பாராளுமன்றத்துக்கு வெளியில் 13வது திருத்தப் பிரேரணைக்கு எதிர்ப்பையும் ஆதரவையும் பகிரங்கமாக தெரிவித்து, நாட்டில் ஒரு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி, அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கூட்டாளிகளும் இப்போது எடுத்துவரும் முயற்சிகள் “பழைய குருடி கதவைத் திறடி” என் பதற்கு அமைய மீண்டும் அவர்களுக்கு படுதோல்வி யையே ஏற்படுத்தும்.
13ஆவது திருத்தச் சட்டம் பற்றி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெலஉறுமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளும் பாரா ளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து இது தொடர் பான தங்கள் நிலைப்பாட்டை முன்வைத்து மற்ற வர்களின் கருத்துக்களையும் தெரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், ஏகோ பித்த முடிவொன்றை ஏற்படுத்தி இந்த சர்ச்சையை சுமுகமாக தீர்த்து கொள்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
இதன் மூலமே யுத்தம் முடிவடைந்துள்ள இலங்கையில் மீண்டும் ஜனநாயக ரீதியிலான நல்லாட்சி நடைபெறுகின்றது என்பதை உலகநாடு களுக்கு நாம் எடுத்துக் காட்ட முடியும்.
No comments:
Post a Comment