Wednesday, May 01, 2013
புக்சி மற்றும் சுமர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது எல்லை பாதுகாப்பு கட்டமைப்புக்களை மாற்றி அமைக்க வேண்டும்; சீன படைகளை நோக்கிய இந்தியர்கள் அமைத்துள்ள கூடாரங்களை காலி செய்ய வேண்டும்; அவ்வாறு இந்தியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்த பின் சீனா தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசனை செய்யும். இவ்வாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான எந்த ஒரு வாக்குறுதியையும் பேச்சுவார்த்தையின் போது சீனா அளிக்கவில்லை.
பீஜிங்கில் இருந்து வரும் உத்தரவிற்காக காத்திருப்பதாக சீன ராணுவத்தினர், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். சீன படைகள் ஊடுருவல் சாதாரண பிரச்னை எனவும் அவற்றை தீர்க்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது சீன படைகளுக்கு பதிலடி கொடுப்பதை இந்தியா தவிர்த்து வருவதை காட்டுவதாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் இந்திய எல்லையை கடந்து சென்று, இருநாட்டு படையினரும் பரஸ்பரம் நல்லுறவை பகிர்ந்து கொள்ளும் மே தின கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய எல்லைக்குள் அமைத்தும் கூடாரத்தை அகற்ற சீனா மறுத்துள்ளதால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மே 9ம் தேதி சீனா செல்லும் பயணத்திலும், சீன பிரதமர் மே 20ம் தேதி இந்தியா வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடில்லி::இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட
பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர்
பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி
உள்ளது. இந்திய எல்லைப்பகுதியில் இருக்கும் இந்திய பாதுகாப்ப படைகளை திரும்பப்
பெறுமாறு சீனா வலியுறுத்தி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சல்மான் குர்ஷித் தகவல் :
இரு நாட்டு ராணுவ உயர்
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மே தின கொண்டாட்டத்தின் போது பேசிய
அவர் கூறியதாவது : சீனா உடனான பேச்சுவார்த்தையில் சீனா தரப்பில் இருந்து
எதிர்பார்த்த முடிவு எட்டப்படவில்லை; இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு அவர்கள்
கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்; நாங்கள் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்;
அவர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவ்வாறு குர்ஷித்
தெரிவித்துள்ளார்.
சீனா கோரிக்கை :
புக்சி மற்றும் சுமர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது எல்லை பாதுகாப்பு கட்டமைப்புக்களை மாற்றி அமைக்க வேண்டும்; சீன படைகளை நோக்கிய இந்தியர்கள் அமைத்துள்ள கூடாரங்களை காலி செய்ய வேண்டும்; அவ்வாறு இந்தியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்த பின் சீனா தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசனை செய்யும். இவ்வாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான எந்த ஒரு வாக்குறுதியையும் பேச்சுவார்த்தையின் போது சீனா அளிக்கவில்லை.
ஐடிபிபி தகவல் :
இந்தியா தனது படைகளை திரும்பப்
பெற்று, அப்பகுதியில் உலோக தகடுகளால் மட்டுமே பாதுகாப்பு எல்லை அமைக்க வேண்டும் என
சீனா விரும்புவதாக இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார்(ஐடிபிபி)
தெரிவித்துள்ளனர். மேலும் அதனைப் பயன்படுத்தி சீனா தனது படைகளை அப்பகுதியில்
ரோந்து வரச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், எல்லை பகுதியில் இந்தியா அதிகளவில்
படைகளை குவித்து வருவதை அறிந்து அவற்றை திரும்பப் பெற வைத்து அதனை தனக்கு சாதகமாக
பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் ஐடிபிபி தெரிவித்துள்ளது. சீனா தனது
படைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்யாமல் இந்தியாவும் தனது எல்லை பாதுகாப்ப
கட்டமைப்பை மாற்ற தயாராக இல்லை எனவும் ஐடிபிபி தெரிவித்துள்ளது.
சீன படைகள் தகவல் :
பீஜிங்கில் இருந்து வரும் உத்தரவிற்காக காத்திருப்பதாக சீன ராணுவத்தினர், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். சீன படைகள் ஊடுருவல் சாதாரண பிரச்னை எனவும் அவற்றை தீர்க்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது சீன படைகளுக்கு பதிலடி கொடுப்பதை இந்தியா தவிர்த்து வருவதை காட்டுவதாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் இந்திய எல்லையை கடந்து சென்று, இருநாட்டு படையினரும் பரஸ்பரம் நல்லுறவை பகிர்ந்து கொள்ளும் மே தின கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய எல்லைக்குள் அமைத்தும் கூடாரத்தை அகற்ற சீனா மறுத்துள்ளதால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மே 9ம் தேதி சீனா செல்லும் பயணத்திலும், சீன பிரதமர் மே 20ம் தேதி இந்தியா வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment