Wednesday, May 1, 2013

இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உயர்வு!!

Wednesday, May 01, 2013
புதுடில்லி::மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார். 1-3-2011 நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932 ஆகும். அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிக்கின்றனர். நகர்புற மக்கள் தொகையில் 97.5 சதவீதம் டில்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர்.

No comments:

Post a Comment