Thursday, April 11, 2013

Thursday, April 11, 2013
இலங்கை::இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக புதுடில்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
 
நேற்று மாலை  கொழும்பு தாஜ் சமுத்திராவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ_னைஸ் பாரூக், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் ஜவாதேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரக் சின்க் தாகூர், தன்ன்ஜேய் சின்ங், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சுகத ரோய் ஆகியாருடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜயோத்திரி மகேத்திரா, இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.குமரன் ஆகியோரும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர்.
 
சுமார் ஒன்றரை மணித்தியாலம் இடம் பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் போருக்கு பிந்திய நிலைமைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீனினால் தெளிவுபடுத்தப்பட்டது.
 
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்றத்தின் காணப்படும் தடைகள் புள்ளி விபரங்களுடன் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
 
குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் ஒரே சமூகம் என்ற வகையில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்பதை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
 
எனினும், இந்த மக்களுக்கிடையில் சில அரசியல்வாதிகளும், மதவாதிகளும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment