Thursday, April 11, 2013

பல அண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பிளவுபட்டிருந்த வரலாற்றைக் கடந்து செல்வதற்கு, பணியாற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது:அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் சாமுவெல் லொக்லீயர்!

Thursday, April 11, 2013
இலங்கை::பல அண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பிளவுபட்டிருந்த வரலாற்றைக் கடந்து செல்வதற்கு, பணியாற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது. என்பதுடன் இலங்கையில்; நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் சாமுவெல் லொக்லீயர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து நேற்று விளக்கமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் இந்தியச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல அண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பிளவுபட்டிருந்த வரலாற்றைக் கடந்து செல்வதற்கு, பணியாற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.

மும்பைத் தாக்குதல் மற்றும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற ஏனைய முக்கிய தாக்குதல்களுடன் தொடர்புடைய லஸ்கர் ஈ தொய்பா அமைப்பு இன்னமும் தெற்காசியாவில் ஆற்றல் மிக்க பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்றும் அட்மிரல் லொக்லீயர் கூறியுள்ளார்.

தெற்காசியா பெரும்பாலும் நேரடியான மோதல்களற்ற பகுதியாக உள்ள போதிலும், பல்வேறு, பெரும்பாலும் உள்ளக சவால்களை கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment