Tuesday, April 9, 2013

முப்பது வருடங்கள் யுத்தம் நடந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, April 09, 2013
இலங்கை::முப்பது வருடங்கள் யுத்தம் நடந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. எனினும் இறுதி 5 நாட்களில் நடந்ததை முழு நாடும் அறியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
நாம் நாட்டுக்காக எதைச் செய்த போதும் குற்றச்சாட்டுக்களும் விமர் சனங்களுமே எஞ்சியுள்ளன என தெரி வித்த ஜனாதிபதி; மனித உரிமையை மதிப்பதில் நாம் அன்றும் இன்றும் முன்னணியிலுள்ளவர்கள் எனவும் தெரிவித்தார்.
 
பாதெனிய, அநுராதபுரம் நெடுஞ் சாலையை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து அதனையொட்டி ய மக் கள் பேரணிக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி; யுத்தம் முடிந்தாலும் இப்போது ஜெனீவாவில் எம்முடன் யுத்தம் ஆரம்பித்துள்ளது. இங்குள்ளவர் களும் சென்று சாட்சியமளிக்கின்றனர். நாம் எதைச் செய்த போதும் குற்றச் சாட்டுக்களே எமக்கு மீதமாகியுள்ளன.
 
முப்பது வருடங்கள் யுத்தம் தொடர்ந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. இறுதி ஐந்து தினங்களில் என்ன நடந்தது என்பதை முழு நாடும் அறியும். எதிரிகள் எதிர் எதிரில் துப்பாக்கிகளுடன் சந்திக்க நேரும் போது முந்தியவர்கள் சுட நினைப்பர். யுத்தத்தின் இயல்பு அதுதான்.
அவர்கள் கூறுவது போல் பெருந்தொகை யாக மரணமடையவில்லை. பெருமள விலானோர் மரணமடைந்து விட்டனர் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். நாம் மனித உரிமை தொடர்பில் மிக வும் உயர் மட்டத்தில் கவனம் செலுத்து பவர்கள், மனித உரிமை மற்றும் மக்க ளின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக நாம் அன்று தொட்டு இன்று வரை முக்கியமளிப்பவர்கள். இப்போதும் அதனை மதிப்பவர்கள் மக்களின் அடிப் படை உரிமைகளை பாதுகாத்து வருபவர் நாம்.
 
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இனங்களுக்கிடையில் அன்னியோன்யத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். சகல இது மதங் களுக்கிடையிலும் நல்லுறவைக் கட்டி யெழுப்பியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதெனியவிலிருந்து அனுராதபுரத் திற்கான நெடுஞ்சாலையின் திறப்பு நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கல்கமுவ வன்னிநாயக்க விளையாட்ட ரங்கில் நடைபெற்றது.
அமைச்சர்கள் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். பி. நாவின்ன, டி. பி. ஏக்கநாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ் தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்று கையில்:- கல்கமுவ வட மேல் மாகாணத் தின் தேர்தல் தொகுதிகளில் முக்கிய பிரதேசமாகும்.
 
கஷ்டப் பிரதேசமும் நூற் றுக்குத் தொண்ணூறு வீதம் விவசாயிகள் வாழும் பிரதேசமுமாகும். இப்பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர்த் தேவைகள் இப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நூற்றுக்கு நூறு வீதம் அதனை நிறை வேற்றியே நிறைவு செய்வோம். மொர கஹகந்த திட்டம் மூலம் போதிய நீரை இப்பகுதிக்கு வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.
இப்பிரதேசம் இன்னொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகளவு இராணுவத்தினர் வாழ்வதும் இப்பிரதேசத் தில்தான். ஒரு குடும்பத்துக்கு நான்கு ஐந்து என நாட்டுக்காகத் தமது பிள்ளை களைத் தந்த இப்பகுதிதாய்மாரும் பெருமைக்குரியவர்கள். அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல பிரதி நிதிகள் வாழும் பிரதேசமாகவும் இது திகழ்கிறது.
இன்று திறக்கப்பட்ட பாதெனிய- அனுராதபுரம் நெடுஞ்சாலையானது 7000 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக் கப்பட்டுள்ளது. 81 கிலோ மீற்றரைக் கொண்ட இப்பாதையில் ஏனைய வீதி களுக்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதற்கும் தனியாக ஒரு கீற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
 
எப்போது நாம் வீதிகளை அகலப்படுத்தி நிர்மாணித்தாலும், வீதிகளில் வேகமாக வாகனங்களை செலுத்துவதற்குத் தடைகள் உள்ளன.
48ம் ஆண்டில் நடைமுறை யிலுள்ள சட்டங்களே இன்றும் உள்ளன. இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். விபத்துக்களைத் தவிர்ப்பதற்கே இத்தகைய சட்டங்கள் என்பதால் நாம் எதிர்காலத்தில் பாதை நிர்மாணிப்பின் போது பயணிகள் நடப்பதற்கு தனியாக ஒரு கீற்றுப்பாதை அமைக்க உத்தேசித்துள்ளோம்.
 
நாட்டின் பல பிரதேசங்கள் பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டு வரு கின்றன. வேலையில்லாப் பிரச்சினை 100ற்கு 4 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சகல பட்டதாரிகளுக்கும் அரச சேவையில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
வேறு எந்த அரசாங்கமும் முன்னெடுக் காத பல்வேறு திட்டங்களை எம்மால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 2005 லிருந்து இன்று வரை பெரும் முன்னேற்றத்திற்கு நாடு இட்டுச் செல் லப்பட்டுள்ளது.
நாட்டை முறையான அபிவிருத்திக்கு உட்படுத்தி சகல இன, மத மக்களும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த் திக்கொள்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் சகல திட்டங்களையும் முன்னெடுத் துள்ளோம்.
 
இது தொடர்பில் அன்று போல் இன்றும் மக்களின் பேராதரவு எமக்கு அவசியமாகிறது. உங்கள் ஆதரவு எமக்குப் பலத்தையும் துணிவையும் வழங்குவது உறுதி. உங்கள் ஆதரவும் தைரியமும்தான் நாடும் நாமும் முன்னேற உறுதுணை வழங்க முடியும்.
மக்களுக்கான வசதிகளை வழங்கி நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப நாம் கரங்களை இணைத்துக் கொண்டு முன்செல்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment