Tuesday, April 9, 2013

புலி காசி மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை!


Tuesday, April 09, 2013
இலங்கை::மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை! நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை என்று செண்டிமெண்டல் பாடல் எழுதியவர் புலிகளின் கவிஞர் காத்தமுத்து சிவானந்தன். நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்,புலிகளின் கழுத்தில் மாலைகள் தொங்கும் என்று கவிதைபாடினார் காசி.ஆனால் பிரபாகரனின் இடுப்பில் கோவணம்தான் தொங்கியது.
 
தனது சகோதரி முறையான பெண்ணைத் திருமணம் செய்து தமிழ்க் கலாச்சாரத்துக்கு புகழ் சேர்த்த காசியின் பிரச்சனை காசியால் நாடு திரும்ப முடியவில்லை என்பதுதான். புலிகளின் அச்சுறுத்தலால் நாட்டுக்குப் போகமுடியாமல் இருந்தவர்கள் எல்லோரும் இப்பொழுது புலிகள் அழிந்தபிறகு நாட்டுக்குத் திரும்பி சுதந்திரமாக உலாவுகிறார்கள்.
 
புலிகளின் ஆயுத முகவர் கே.பி மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்த புலிகளின் முகவர்கள் நாடு திரும்பிவிட்டார்கள்..  ஆனால் புலிகளுக்கு கவிதை பாடிய காசியால் மட்டும் நாடு திரும்ப முடியவில்லை! புதுவை போல தானும் காணமல் போய்விடுவேன் என்ற பயம் காசிக்கு இருக்கத்தான் செய்கிறது.தமிழர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப தடையாக இருந்தவர்கள் புலிகளேயொழிய அரசாங்கமல்ல என்பது புலிகள் அழிந்தபிறகு நிரூபணமாகியது.
 
காசி கனடாவில் இயங்கும் பனங்கொட்டைத் தமிழ் வானொலியான சி.எம்.ஆரில் வந்து பேட்டி கொடுத்தார். இந்தியாவின் எதிரி நாடு இலங்கைதான் என்று முழங்கினார். இந்தியாவை உளவு பார்க்க அபிவிருத்தி என்ற பெயரில் 25 ஆயிரம் சீனர்கள் இலங்கை வந்திருப்பதாகக் கூறினார்.இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் இராணுவ வீரர்கள் என்றார்.
 
இந்தியாவில் இருக்கின்ற காசிக்கு இலங்கைக்கு வந்த சீனர்கள் உளவாளிகள் என்று எப்படித் தெரிந்தது? இந்தியாவை சீனா இலங்கைக்கு வந்துதான் உளவு பார்க்க வேணுமா? புலிகளின் வாலில் தொங்கிய காசியின் நிலை பரிதாபமானதுதான். காசி இப்போது தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் வெல்லும் என்கிறார்.
 
புலிகளால் தமிழீழம் கிடைக்கும் என்று நம்பிய காசி தமிழ்நாட்டு மாணவர்களின் உண்ணாவிரதம் தமிழீழம் பெற்றுத்தரும் நம்புவது காசியின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துகிறது.
 
இப்போது லண்டனுக்கு வந்துள்ள காசி தன்னோடை சில நிமிடங்கள் பேசட்டாம். காஷ்மீரில் ஒருவர் இந்தியப்பிரதமர் ஆகமுடியுமாம் ஆனால் இலங்கையில் அது சாத்தியமா? என்று கேட்கிறார் காசி! அப்படி வரக்கூடிய சாத்தியங்களெல்லாம் புலிகளால் இல்லாமல் போய்விட்டது. லக்ஸ்மன் கதிர்காமர்.ஜெயராஜ் பெர்னாண்டோப்பிள்ளே போன்ற தமிழ்த் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள். கதிர்காமர் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. காஷ்கீரில் ஒருவர் இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. இலங்கையில் அது இருக்கிறதா என்று கேடும் காசி பிரபாகரன் மட்டும்தான் தமிழருக்குக்கு ஏக தலைவர். மற்றவர்கள் யாரும் தலைவர்களாக இருக்க முடியாது என்று பிரபாகரனால் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் பிரபாகரனால் கொல்லப்பட்டது பற்றி என்ன கூறப் போகிறார்.? காசி போன்று இலங்கையில் காலடி எடுத்து வைக்க முடியாமல் வெளிநாடுகளில் இருந்து புலம்புவதனால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியாவைத் திருப்பிவிட முடியாது.
 

No comments:

Post a Comment