Monday, April 8, 2013

உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் ஆர்ப்பரிப்புக்களுக்கு ஆட்பட்டு வாக்களித்துள்ளனர். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை: ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன்!

Monday, April 08, 2013
இலங்கை::உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கிராம மக்களின் தேவைகளை இனங்கண்டு செயற்படுத்துவதில் ஆர்வம் காட்டாது, அலட்சியப் போக்குடன் செயற்படுவதாலேயே, நாம் கிராமங்கள் தோறும் சந்திப்புக்களை நடாத்தி மாகாண, மத்திய அரசின் உதவியுடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் என பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும், ஈ.பி.டி.பியின் வடமராட்சி பிரதேச இணைப்பாளருமான ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன் தெரிவித்தார்.   

அல்வாய் கிராம அபிவிருத்தி தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (06) அல்வாய் சாமணந்தறைப் பிள்ளையார் கோவிலடியிலுள்ள அல்வாய் கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் கவிச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் கூட்டமைப்பினரின் ஆர்ப்பரிப்புக்களுக்கு ஆட்பட்டு வாக்களித்துள்ளனர். ஆனால் கூட்டமைப்பினர் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்பதும் உட்கட்சிப் பூசல், சமூக ரீதியாக உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு என தமிழ்த் தேசிய  கூட்டமைப்புக்குள் குத்து வெட்டுக்கள் தாராளமாக அரங்கேறியுள்ளதை அவர்கள் காண்கின்றார்கள். கூட்டமைப்பினரின் சந்தர்ப்பவாத கவர்ச்சிப் பேச்சுக்களால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதையும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வுகள் மேற்கொள்ளப்படும் போது தொடர்ச்சியாக குறைபாடுகளையே கிராம மட்டப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். அக்குறைபாடுகள் முழுவதும் உள்ளூராட்சி மன்றமே பொறுப்பானவர்கள் என்பதைக் காண முடிகின்றது. எனவே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக உள்ளவர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து மக்களின் தேவைப்பாடுகளை பெற்று வருகின்றனர்.

இதில் பங்கு வேம்படி மயாணத்தில் எரியூட்டு மேடை அமைத்தல், கிளானை வீதி, ஞான வைரவர் வீதி, மனோகரா விளையாட்டு மைதான மலசலகூட வசதி, கவிஞர் செல்லையா வீதி,  மனோகரா முன்பள்ளிக்கு சுற்று மதில் அமைத்தல் என பல கோரிக்கைகள் அமைப்புக்களால் முன் வைக்கப்பட்டன. கரவெட்டி பிரதேசசபை எதிக்கட்சித் தலைவர் அருணாசலம் சந்திரசேகரம் அவர்கள் தனது ஒதுக்கீட்டிலிருந்து ஞானவைரவர் வீதிக்கு 05 வீதி விளக்குக்களை முதற்கட்டமாக பொருத்தித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment