Saturday, April 27, 2013
இலங்கை::திட்மிட்டவாறு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் திட்டமிட்டவாறு அமர்வுகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை பிரயோகிக்க சில தரப்பினர் கடுமையான முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடாத்த சில தரப்பினர் கடுயைமான முயற்சி எடுத்து வந்ததாகவும், இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்தக் கூடாது என்பதில் புலி ஆதரவு அமைப்புக்கள் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார், எனினும், இந்த முயற்சிகள் வெற்றியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment