Saturday, April 27, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடுக்க கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆகியோர் ஆதரவு வழங்கி வருவதாக தெரிய வந்துள்ளது என திவயின கூறியுள்ளது.
கனேடிய தமிழ் காங்கிரஸ் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் ராதிகா சிற்சபேசன், புலிகளின் ஆதரவாளர் எனவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்களுடன் இலங்கைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேப்ரோவும் இணைந்துள்ளார்.
இதனை தவிர செனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட நோ பைர் ஷோன் திரைப்படத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரேவும் கனேடிய பிரதமரின் முயற்சிக்கு உதவியுள்ளார். அவர் இந்த திரைப்படத்தை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கு அனுப்பி வைத்து, மாநாடு இலங்கையில் நடைபெறுவதை நிறுத்துமாறு கோரியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment