Friday, April 26, 2013

இந்திய எல்லையில் சீனா ராணுவத்துக்கு உணவு, சிகரெட்!

Friday, April 26, 2013
ஜம்மு காஷ்மீர்::ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் மீண்டும் ஊருவி அந்நாட்டு ராணுவத்தினருக்கு தேவையான உணவு பொதிகள், சி

வடக்கு லடாக் பகுதியின் தவுலத் பெக் ஒல்டி என்ற இடத்தில் கடந்த 15-ந் தேதி சீன ராணுவத்தினர் 10 கிலோ மீட்டர் தொலைவு இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஒரு சோதனைச் சாவடி நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவத்தினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று ஏப்ரல் 18-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இருநாடுகளின் பிரிகேடியர்கள் தரத்திலான 'கொடி அமர்வு' என்ற சம்பிராதய முறையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்றும் பிரிகேடியர் பிஎம் குப்தாவும் சீன பிரிகேடியர் அயன் யான்டியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏப்ரல் 21-ந் தேதியன்றும் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் எல்லைக்குள் ஊடுருவியது பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் நாளை 26-ந் தேதி பிரிகேடியர்கள் தலைமையிலான 'கொடி அமர்வு' பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. தற்போதைய எல்லைப் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, சீனாவுடன் பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.

நாட்டின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எந்த ஒருநடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார். இதேபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தங்களை சீன ராணுவம் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
கரெட் பாக்கெட்டுகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை விநியோகித்து விட்டு சென்றிருக்கும் தகவலால் எல்லையில் பதற்ற்ம அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment