Friday, April 26, 2013

'இளவரசி கேட் மிடில்டன் நீச்சல் உடை விவகாரம்!

Friday, April 26, 2013
UK::இங்கிலாந்து நாட்டின் இளவரசியும், வில்லியம்சின் மனைவியுமான கேட் மிடில்டன் நீச்சல் உடையில் இன்றி இருந்த புகைப்படம் கடந்த செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் வெளி வந்தது. குளோசர் என்ற அந்த செய்தி இதழின் தலைமை செயல் அதிகாரியான எர்னஸ்டோ மவுரி மற்றும் லா பிராவின்ஸ் என்ற பத்திரிகையின் பெண் புகைப்படக்காரருமான வலேரி சுவாவ் ஆகிய இருவர் மீது தனி நபர் தலையீடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

வலேரி சுவாவ் என்ற அந்த பெண் புகைப்படக்காரர் இளவரசியின் நீச்சல் உடை புகைப்படத்தை தனது பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.

மேலும், வலேரி சுவாவ் அல்லது வேறு எவரும் இளவரசியின் மேலாடை இன்றி காணப்படும் புகைப்படங்களை எடுத்து அவற்றை குளோசர் செய்தி இதழுக்கு கொடுத்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் நீச்சல் உடை படத்தை ப்ரான்ஸ் இதழ் ஒன்று அட்டைப்படமாக வெளியிட்டது. இது தொடர்பாக அந்த இதழின் கேமராமேன், எடிட்டர் என இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment