Saturday, April 6, 2013

சீனாவின் அணுவாயுதங்களுடனான நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்பில் பயணித்திருப்பதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்!

Saturday,April 06,2013
சென்னை::சீனாவின் அணுவாயுதங்களுடனான நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்பில் பயணித்திருப்பதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
த இந்தியா டுடே பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
இந்திய கடற்படையினர் இவ்வாறான கருத்து ஒன்றை முன்வைக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
 
இவ்வாறு 22 தடவைகள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மித்து பயணித்திருப்பதுடன், அதில் 13 தடவைகள் இலங்கையின் தெற்கு கடப்பரல் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து இலங்கை கடற்படையினர் அறிந்திருக்கவில்லை என்றும் இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை இந்திய கடற்படையினரின் இந்த தகவல் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர், இதனை நிராகரித்துள்ளார்.
 
சர்வதேச கடற்பரப்பினுள் எந்த நாட்டின் நீர் மூழ்கி கப்பலும் பயணிக்க முடியும்.
 
எனினும் இலங்கை கடற்பரப்பினுள் அவர்கள் பயணித்திருந்தால், கண்டிப்பாக கடற்படையினருக்கு தெரியவந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment