Saturday, April 6, 2013

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 26 மீனவர்கள் கைது!

Saturday,April 06,2013
சென்னை::காரைக்கால்: நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர். இதனால், காரைக்காலில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், நேற்று காரைக்கால் மீனவர்கள் 26 பேரை நடுக்கடலில் மறித்து, இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு: காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கவுரி. திரு.பட்டினத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ், சிவராஜ், சங்கர், வீரபத்திரன். இவர்கள் 5 பேருக்கும் சொந்தமான விசைப் படகுகளில் கடந்த 3ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வீரபத்திரன், கண்ணதாசன், முத்துக்குமார், ஈஸ்வரன், சந்திரகாசு, சாரங்கபாணி, சுப்ரமணியன், காளியப்பன், சந்திரபாண்டியன், ராமன், வெற்றிவேல், குமார் உள்ளிட்ட 26 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் ரோந்து படகில் அங்கு வந்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி காரைக்கால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மீன்களை கடலில் கொட்டிவிட்டு, வலைகளையும் அறுத்தனர். பின்னர் 26 மீனவர்களையும் கைது செய்து தங்களது படகில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் சென்ற படகுகளின் கதி என்னவென்று தெரியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். உறவினர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார் அதிர்ச்சி அடைந்தனர். காரைக்கால் மாவட்ட கலெக்டர், புதுச்சேரி முதல்வர் மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 

No comments:

Post a Comment