Thursday, April 25, 2013

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட் வடகிழக்கு மாகாண மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் நல்ல முறையில் நடைபெறுவதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது!

Thursday, April 25, 2013
இலங்கை::இலங்கையில் போரினால் பாதிக்கப்பட் வடகிழக்கு மாகாண மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் நல்ல முறையில் நடைபெறுவதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே 25 ஆண்டுகளாக நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. இறுதி கட்ட சண்டையில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீடுகளை இழந்த மக்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். வீடுகளை இழந்த, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு, 50 ஆயிரம், வீடுகளை கட்டி தர இந்திய அரசு முன் வந்தது. முதல் கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் கட்டஇலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகளில் தங்கள் வசதிக்கேற்ப வீடுகட்ட அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு தவணை முறையில் இதுவரை, 228 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணை பணம், 11,379 பேருக்கும், இரண்டாவது தவணை 3,448 பேருக்கும், மூன்றாவது தவணை 741 பேருக்கும், நான்காவது தவணை 18 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கருத்தில் கொண்டு, வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.நா.,உதவியுடன் செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்கள் 36 மாதங்களில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசால் நல்ல முறையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment