Thursday, April 25, 2013

சவூதி அரேபியாவில் சிறையடைக்கப்பட்டுள்ள இரு இலங்கை பெண்களை மீட்டு இலங்கைக்கு அனுப்புவதற்கு, சவூதி அரேபிய பிரசைகள் உதவ முன்வந்துள்ளனர்!

Thursday, April 25, 2013
இலங்கை::சவூதி அரேபியாவில் சிறையடைக்கப்பட்டுள்ள இரு இலங்கை பெண்களை மீட்டு இலங்கைக்கு அனுப்புவதற்கு, சவூதி அரேபிய பிரசைகள் உதவ முன்வந்துள்ளனர்.
 
இதற்கு என 22 ஆயிரம் சவூதி ரியால்களை அந்த மக்கள் வழங்க முன்வந்துள்ளதாக “அல் ரியாத்” செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
வீட்டு சுத்திகரிப்பு தொழிலாளிகளாக பணியாற்றி வந்த இலங்கை பெண்கள் இருவரும், தாம் பணியாற்றிய வீடுகளில் இருந்து வெளியேறி ரியாத்தில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் சரணடைந்துள்ளனர்.
 
தம்மை மீண்டும் தாம் பணியாற்றிய வீடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என கோரியிருந்தனர்.
 
இந்த நிலையில், வேலை கொள்பவர்களால் சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிற்கு அமைய பணியாளர்கள் தலா 11 ஆயிரம் ரியால்களை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
பணியாளர்கள் இருவரும் கைச்சாத்தான ஒப்பந்தத்திற்கு அமைய செயல்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
பணியாளர்களை மீள இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பயண செலவு மற்றும் அவர்கள் தொடர்பாக செலவிடப்பட்ட பணத்தை மீள அறவிடும் நோக்கிலேயே இந்த பணம் நட்டஈடாக கோரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குறிப்பிட்ட தொகை சவுதி அரேபிய பணியாளர்களால் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீள இலங்கைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment