Thursday, April 25, 2013

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மூன்று அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை!

Thursday, April 25, 2013
ஆஸ்திரேலியா::பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மூன்று அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடத்துகிறது.
 
இலங்கை, ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்து குறித்த மூன்று பேரின் மீதும், பயங்கரவாதம் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியா விசாரணை நடத்தி வருவதாக, அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் பிரென்டன் ஓ கொனர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை அகதிகள் தொடர்பில் எதிர்கட்சியினர் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடுவதையும் அமைச்சர் பிரண்டென் ஓ கொனர் கண்டித்துள்ளார்.
 
எதிர்கட்சியினருடன் அகதிகள் விடயங்களை பகிர்ந்துக் கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.
 
எனினும் இந்த விடயத்தில் வரைமுறைகள் இன்றி, எதிர்கட்சியினர் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கி, முதிர்ச்சியற்ற அரசியலை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment