Wednesday, April 17, 2013

ஆயுதக் குழுவாக மீளவும் புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Wednesday, April 17, 2013
இலங்கை::புலிகள் மீளவும் ஒருங்கிணையக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.  முழு வீச்சில் ஆயுதக் குழுவாக மீளவும்  புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
பிரபல சர்வதேச ஊடகமொன்று இலங்கையில் மீண்டும் புலிகள் ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறியிருந்தது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பெருமளவிலான தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்க முனைப்பு காட்டி வருவதாக தி எக்கனோமிஸ்ட் தெரிவித்திருந்தது.
 
வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே உள்நாட்டில் இவ்வாறான போராட்டங்கள் வெடிக்கக் கூடுமென இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.எனினும், இவ்வாறான கிளர்ச்சிகளை கட்டுப்படுத்த போதியளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆயுத போராட்டமொன்றை தொடர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மிகவும் கிரமமான முறையில் வெற்றிகரமாக இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment