Wednesday, April 17, 2013

பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 காவல் துறையினர் உட்பட 20 பேர் காயம!

Wednesday, April 17, 2013
பெங்களூர்:: பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 காவல் துறையினர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பெங்களூர் மல்லீஷ்வரம் பகுதியில் உள்ள பாஜாக அலுவலகம் அருகே இன்று காலை 11 மணி அளவில் குண்டு வெடித்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர், அங்கு நிறுத்தபட்டிருந்த 3 கார்களும் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தன.

கர்நாடகா மாநில சட்டசபைக்கான தேர்தல் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் பெங்களூர் பாஜக அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென்று குண்டு வெடித்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தெரிவித்த பெங்களூர் காவல்துறை ஆணையர் ராகவேந்திர ஆரத்கர், பெங்களூர் மல்லேஷ்வரத்தில் உள்ள பாஜாக அலுவலகம் அருகே உள்ள கோவிலுக்கு அருகில் இந்த குண்டு வைக்கபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ஏற்கனவே விசாரணை துவங்கியுள்ளது. வெடித்த குண்டு அங்கு நிறுத்தபட்டிருந்த மோட்டார் சைக்களில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.குண்டு வெடித்ததில் 8 காவல் துறையினர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர், காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment