Tuesday, April 16, 2013

உதயனுக்கு மட்டும் ஏன் இப்படி? உதயன் பத்திரிகையின் உரிமையாளரான தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அண்மைக் காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது!

Tuesday, April 16, 2013
இலங்கை::இலங்கையில் இயங்கிவரும் பல்வேறு ஊடகங்களும், வெளியீடுகளும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், அந்த ஊடகங்கள் எவற்றின்மீதும் எந்தவித அழுத்தங்களோ மிரட்டல்களோ விடுக்கப்படவில்லை. அது ஏன் உதயன் பத்திரிகை மீது மட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் அச்சியந்திரப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
 
இலங்கையில் செயற்படும் ஒரு சில ஊடகங்கள் தவிர தனியாருக்குச் சொந்தமான பல ஊடகங்கள் அரசாங்கத்தையும்,படையினரையும் விமர்சித்து வருகின்றன என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அந்த ஊடகங்கள் மீது எந்த வன்முறையும் நிகழ்ந்ததாக இல்லை என்றும், அது ஏன் உதயன் பத்திரிகை மீது மட்டும் இவ்வாறு வன்முறைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்தை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வரும் உதயன் பத்திரிகையின் உரிமையாளரான தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அண்மைக் காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்,அது ஏன் அவருக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறதுஎன்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுதாப அலைகளைத் தோற்றுவிப்பதற்கும் சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவும்தான் இவ்வாறான தாக்குதல்கள் உதயன் பத்திரிகை மீது நடாத்தப்படுவதாகக் கூறப்பட்டுவருகிறது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் உதயன் பத்திரிகை இயந்திரத்துக்கு மோசமான சேதங்கள் எதுவும் ஏற்பட வில்லை என்பது ஆரம்ப விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாகவும் ஓரிரு பத்திரிகை றோல்கள் மட்டுமே எரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உதயன் பத்திரிகை மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் இதில் இலங்கை இராணுவத்தினருக்குத் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை தாம் அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். உதயன் பத்திரிகை அச்சியந்திரப் பகுதி மீதான தாக்குதல் ஒரு உள்வீட்டு விவகாரம் என்று முன்னதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்‌ஷ்மன் ஹீலுகல்லவும் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment