Saturday, April 20, 2013

இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பொய்யான ஆதாரமற்ற பிரசாரங்களை அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளும், புலிகளை ஆதரிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய புலம்பெயர் தமிழர்களும் ஏகாதிபத்திய நாடுகள் போடும் பிச்சைக் காசான டொலர் நோட்டுகளுக்காக தலையாட்டி பொம்மைகளாக வருகின்றனர்!



Saturday, April 20, 2013
இலங்கை::ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடந்த மார்ச் மாதத்தில் கொண்டுவந்த பிரேரணையை அடுத்து இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பொய்யான ஆதாரமற்ற பிரசாரங்களை அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளும், புலிகளை ஆதரிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய புலம்பெயர் தமிழர்களும் ஏகாதிபத்திய நாடுகள் போடும் பிச்சைக் காசான டொலர் நோட்டுகளுக்காக தலையாட்டி பொம்மைகளாக இருந்துவரும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கும் தக்க பாடம் கற்பி த்து உண்மை நிலையை உலகநாடுகளுக்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
 
30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்த பின் சுமார் நான்காண்டுகளாக அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நல்ல பணிகளை விள க்கிக் கூறுவதற்கு தேவையான ஒரு பலம் வாய்ந்த ஊடக ஒன்றி யத்தை அரசாங்கம் அமைத்தல் அவசியமாகும்.
 
இதன் மூலம் யுத்தத்தின் பின்னர் உள்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களை மீள்குடியேற்றுவதற்காக எடுத்துவரும் செயற்பாடுகளை தொலை க்காட்சி குறும்படங்களாக தயாரித்து வெளிநாடுகளில் உள்ள எமது தூதரகங்களின் மூலம் அந்நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், பாரா ளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் கல்விமான்கள், சமூ கத்தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பல்கலைக்கழகங் கள் ஆகியவற்றுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
 
குறுந்தொலைக்காட்சி விவரணப் படங்களுடன் நின்றுவிடாமல் இலங் கையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை விரிவாக விளக்கக்கூடிய அழகிய வர்ணப் புகைப்படங்களை உள்ளடக்கும் கைநூல்களை யும் பிரசுரித்து உலக நாடுகளில் விநியோகிக்க வேண்டும். இந்தப் பணியை செய்வதற்கு பெருமளவு பணம் செலவானாலும் அத னால் நாட்டுக்கு நல்ல பலன் கிடைப்பது உறுதியாகும்.
 
மீள்வாழ்வு பற்றி நாம் வெளிநாட்டவர்களுக்கு விளக்கிக்கூறும் போது, மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அரசாங்கம் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்ற பரந்த பிரதேசத்தில் எல்.ரி. ரி.ஈயினால் புதைக்கப்பட்ட மிதி வெடிகள், தரைக்கண்ணி வெடிகள் ஆகியவற்றை அகற்றியெடுக்கும் உயிராபத்தை எதிர்நோக்கக் கூடிய பணிகளையும் இலங்கை அரசாங்கம் இப்போது பெருமள வில் செய்து முடித்திருப்பதையும் இந்தப் பணியில் ஈடுபட்ட எத்த னையோ தொண்டர்கள் மிதிவெடிக்கும், கண்ணிவெடிகளுக்கும் பலி யான பரிதாப நிகழ்வுகளையும் நாம் சுட்டிக்காட்டுவது அவசியமா கும்.
 
அத்துடன் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகளில் மக்களை குடியமர்த் துவதற்கு முன்னர் அரசாங்கம் அவர்களுக்கு மேற்கொண்டு வரும் வாழ்வாதார திட்டங்களையும் விளக்கமாக எடுத்துக் காட்ட வேண் டும். யுத்தத்தினால் சீர்குலைந்து போன பாடசாலைக் கட்டிடங்கள், அரசாங்க காரியாலயங்கள், ஆஸ்பத்திரிகள் போன்றவற்றை சுமார் நான்கு ஆண்டுகளில் கட்டிமுடித்து வடக்கு, கிழக்கில் சகஜ நிலையை உண்டாக்கி இருப்பது தொடர்பான சகல விபரங்களையும் நாம் அவர்களுக்கு அறியத்தருதல் அவசியம்.
 
யுத்தத்தினால் பாழடைந்து போன வடக்கு, கிழக்கில் உள்ள நெற்செய் கையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக கண்ணி வெடிகளை அகற் றிய பின்னர் அப்பகுதி விவசாயிகளுக்கு விதை நெல்லையும், உர ப்பசளையையும் இலவசமாக விநியோகிப்பதுடன் இரண்டு, நான்கு சக்கர உழவு இயந்திரங்களை வங்கிகள் மூலம் சலுகை கடன் அடி ப்படையில் பெற்றுக் கொடுத்து மீண்டும் வடக்கு, கிழக்கின் நெல் உற் பத்தியை பெருக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
புலிபயங்கரவாதிகளினால் யுத்தத்தின் போது நிர்மூலமாக்கப்பட்ட சிறிய, பெரிய விவசாயக் குளங்களை மீண்டும் செப்பனிட்டு புனரமைத்து இருபோக நெல் விவசாயத்திற்கும் அவற்றின் மூலம் நீரை சிக்கன மாக பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளும் இப்போது நல்ல வெற்றியை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கிய சிங்கள மட்டும் சட்டத்தினால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் இப்போது இருமொழிக் கொள்கையை நாடெங்கிலும் அமுலாக்கி வருகிறது. இதன் மூலம் தமிழ் மாத்திரம் தெரிந்த தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி அரசாங்கக் காரியாலயங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று தங்கள் அலுவல்களை தமிழ் மொழியி லேயே திருப்திகரமான முறையில் செய்து முடிப்பதற்கும் அரசாங் கம் வகை செய்துள்ளது.
 
அரசாங்க சேவையில் குறிப்பாக பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளில் தமிழ் மக்கள் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் ஆயுதப்படைகளிலும், பொலிஸ்படையிலும் தமிழர்கள் பெருமளவில் இப்போது சேர்த் துக் கொள்ளப்படுகிறார்கள்.
 
அரசாங்கத்திடம் சரணடைந்த எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தைச் சேர்ந்தவர்களு க்கு புனர்வாழ்வு அளித்த பின்னர் அவர்களை அரசாங்கம் விடு வித்தாலும் அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் செய்து கொடுக்கப் படவில்லை என்ற இன்னுமொரு முறைப்பாடும் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. முன்னாள் அங்கத்தவர்களுக்கு சிவில் பாதுகாப்பு திணை க்களத்தின் கீழ் நியமனங்களை வழங்கி அவர்களுக்கு சுமார் 23,000ரூபா வரை மாதாந்த சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அது மட்டுமன்றி முன்னாள் எல்.ரி.ரி.ஈ. பெண் உறுப்பினர்கள் இராணு வத்திலும் இப்போது சேர்த்துகொள்ளப்பட்டுள்ளனர்.
 
தமிழர்களை அரசாங்கம் அடக்கி ஆள்கிறது என்று தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு நாம் வெளிநாடுகளில் இவ்விதம் ஆதார பூர்வமான பதில்களை எடுத்துரைத்து இலங்கைக்கு எதிரான தீய சக்திகளின் முகமூடிகளை களைந்தெறிவது அவசியமாகும்.

No comments:

Post a Comment