Saturday, April 20, 2013

பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு: விசாரணை தீவிரம் : தமிழகத்தை சேர்ந்த நால்வர் உட்பட எட்டு பேர் கைது!

Saturday, April 20, 2013
பெங்களூரு::பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த, நான்கு

கர்நாடக மாநிலம், பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே, கடந்த புதன்கிழமை, குண்டு வெடித்ததில், 16 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக, பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட, மோட்டார் சைக்கிளின் பதிவு எண், தமிழகத்தை சேர்ந்தது என்பதால், தமிழக போலீசார் உதவியுடன், கர்நாடகா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கர்நாடக போலீசால் நியமிக்கப்பட்ட, சிறப்பு போலீஸ் படையினரும், தமிழகத்தின் பல இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன் தினம் இரவு, வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில், அக்பர் பாஷா, சலீம் உட்பட, நான்கு பேரை கைது செய்துள்ள சிறப்பு படையினர், நேற்று பெங்களூரில், நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரிடமும், ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் குண்டு வெடிப்பு தொடர்பாக, முக்கியமான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தின், சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குண்டு வெடிப்புக்கு, சில நிமிடங்களுக்கு முன், 25 வயதுள்ள வாலிபர் ஒருவர், சந்தேகத்துக்கிடமாக நடமாடியது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், அந்த நபரின் புகைப்படம், கம்ப்யூட்டரில் தயாராகி வருகிறது.குண்டு வெடித்த இடத்தில், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும், தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
பேர் உட்பட, எட்டு பேரை, கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment