Saturday, April 20, 2013

ராமேஸ்வரம் சுற்றுலா வந்த தாய்லாந்து புத்த பிட்சு, இலங்கை செல்ல தகவல் கேட்டதால்: உளவுப்பிரிவு ரயில்வே போலீசார் விசாரண!

Saturday, April 20, 2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் சுற்றுலா வந்த தாய்லாந்து புத்த பிட்சு, இலங்கை செல்ல தகவல் கேட்டதால் அவரிடம் உளவுப்பிரிவு ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

தாய்லாந்துதலைநகர் பாங்காக்வில் வாழும் புத்த பிட்சு எமுராய், 45. இவர், மூன்று மாதமாக மகராஷ்டிரா அவுரங்கபாத் பாபா சாகிப் பல்கலையில் பாலி மற்றும் புத்த மதம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த இவர், நேற்று ராமேஸ்வரம் வந்தார். தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும், ஜீப் டிரைவரிடம், இந்திய, இலங்கை வரைபடத்தை காட்டி, தனுஷ்கோடியில் இருந்து, இலங்கைக்கு எப்படி செல்வது என கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜீப் டிரைவர், எமுராயை, ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார்.
 
தகவலறிந்த உளவுப்பிரிவு போலீசார், இவரது பையை சோதனையிட்டனர். சந்தேகத்திற்குரிய பொருள்கள் அவரிடம் இல்லாததால், அவரிடம் திருச்சியில் இருந்து விமானம் மூலம், இலங்கை செல்லுமாறு கூறினர். பின்னர், திருச்சிக்கு அவரை பாசஞ்சர் ரயிலில் அனுப்பி வைத்தனர்.

 

No comments:

Post a Comment