Wednesday, April 10, 2013

அவுஸ்திரேலியாவையடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்து செல்ல உதவுமாறு கோரிக்கை!

Wednesday, April 10, 2013
இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 66 பேர் இந்தப் படகில் இருப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளதென அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயரை மேற்கோள் காட்டி அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தை அண்மித்த ஜெரல்ட்ரன் துறைமுகத்திற்கு அருகில் இந்த படகு கண்காணிக்கப்பட்டுள்ளது.
 
படகில் உள்ளவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
 
சர்வதேச கடல் எல்லைகள் மற்றும் பாதுகாப்புத் தடைகளைத் தாண்டி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த படகிலிருந்த 66 புகலிடக் கோரிக்கையாளர்களை கிறிஸ்மஸ் தீவிற்கு அனுப்ப அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 66 பேர் இந்தப் படகில் இருந்ததாக அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயர் தெரிவித்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தை அண்மித்த ஜெரல்ட்ரன் துறைமுகத்திற்கு அருகில் இந்த படகு கண்காணிக்கப்பட்டிருந்தது.
சுமார் 6 வாரங்களாகப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தப் படகில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகில் உள்ளவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த படகில் இருந்தவர்கள் தாம் நியூசிலாந்திற்கு செல்ல
வேண்டுமெனவும் அதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment