Wednesday, April 10, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை: வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Wednesday, April 10, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்க ஆதரவு நாடுகளினால் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு தடவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்கும் நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக அளவில் கவனம் செலுத்தினாலும், இலங்கையில் பாரியளவில் குழப்ப நிலைமைகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச சுயாதீன விசாரணைகளு;கு இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டு வரும் நல்லிணக்கத்தை குழப்பும் முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment