Tuesday, April 23, 2013

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாண விஜயத்தின்போது மாணவர்களுக்கு சீருடை வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்!

 Tuesday, April 23, 2013
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு.கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தமது யாழ்ப்பாண விஜயத்தின்போது மாணவர்களுக்கு சீருடை வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் 1500 மாணவர்கள் செயலாளரிடமிருந்து சீருடைப் பொதிகளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டனர். இலங்கை இராணுவத்தின் 52ஆம் படைப்பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி வைபவமானது நேற்று (ஏப் 22) வரனியில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வின் போது, 10ஆவது கெமுனு படைப்பிரிவு, 16ஆவது கஜபா படைப்பிரிவு, 10வது இலங்கை தேசிய படைபோன்ற படைப்பிரிவுகளைச் சேர்ந்த முகாம்களை சூழவுள்ள பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களே சீருடைப் பொதிகளை பெற்றுக் கொண்டனர். இவ்வைபவத்தில் 24 பாடசாலை அதிபர்களும் 100 ஆசிரியர்களும் செயலாளரிடமிருந்து அன்பளிப்புக்களைப் பெற்றுக் கொண்டனர்.
 
பாதுகாப்பு செலாளர் அங்கு உரையாற்றுகையில் யுத்தகாலங்களின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மீளக் கட்டி எழுப்புவதற்காக அரசாங்கம் பல பில்லியன் ரூபாக்களை செலவிட்டுள்ளது அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்பதற்காக தனிப்பட்டவர்கள் கூட முன்வருகின்றார்கள். தனிப்பட்ட ஒரு குழுவினர் தங்களது சகோதரர்களுக்காக உதவிசெய்ய முன் வந்திருப்பது ஒரு சிறந்த உதாரணமாகும் எனக்கூறியதுடன் கஷ்ட்டப்பட்டு உழைத்த தமது பணத்தை எதுவித பாகுபாடும் இன்றி இந்தப்பிள்ளைகளுக்கு சேவை செய்யவேண்டு மென்ற நோக்குடன் செலவிட முன் வந்த கொடை வள்ளல்களையும் வெகுவாகப்பாராட்டினார்.
மேலும் மாணவர்களிடையே மறைந்திருக்கும் திறமைகளை நாட்டின் அபிவிருத்திப்பணிகளுக்காக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத்தளபதி, மாகாண உதவிக்கல்விச் செயலாளர், சிரேஷ்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், பாட சாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என அதிகமானோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment