Tuesday, April 23, 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவம் கைதான வாலிபருக்கு மரண தண்டனை?.

Tuesday, April 23, 2013
பாஸ்டன்::பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான வாலிபருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த 15ம் தேதி  மராத்தான் போட்டி நடந்தபோது 2 குக்கர் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 3 பேர் இறந்தனர், 170 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். இதில் முதுகில் பெரிய பையுடன் அங்கு வலம் வந்த இரு நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர்.

விசாரணையில், பாஸ்டனில் குண்டு வெடிப்பு நடத்தியது செசன்ய குடியரசிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய சகோதரர்கள் தாமர்லான் சார்னியோவ் (26), தோகர் சார்னியோவ் (19) என தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.இந்த நிலையில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் அருகே பதுங்கியிருந்தபோது தாமர்லான் சார்னியோவ் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தாமர்லான்  சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சகோதரர் தோகர் சார்னியோவ் குண்டு காயத்துடன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார். குண்டு காயத்துடன் படகில் பதுங்கியிருந்த தோகரை போலீசார் கைது செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது தொண்டை பகுதியில் குண்டடிபட்ட காயம் இருப்பதால் அவரால் பேசமுடியவில்லை. தலை, கால் பகுதியில் காயம் உள்ளது. தோகரிடம் இருந்து எந்த தகவலும் பெற முடியவில்லை என்று உளவுப்பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், ‘பாஸ்டன் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான தோகர் மீது பொதுமக்களுக்கு உயிர் இழப்பை ஏற்படுத்தியது, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, துப்பாக்கி பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் அவருக்கு அதிக பட்ச தண்டையாக மரணதண்டனை விதிக்கலாம்‘ என்று கூறினார்.

No comments:

Post a Comment