Wednesday, April 24, 2013

மாகாண சபைகளின் திருத்தச் சட்டமூலங்களுக்கு மாகாண சபைகள் அங்கீகாரம் : சபாநாயகர் சமல் ராஜபக்ஷ!

Wednesday, April 24, 2013
இலங்கை::மாகாண சபைகளின் அங்கீகாரத் திற்காக அனுப்பப்பட்ட 4 திருத்தச் சட்டமூலங்களுக்கு மாகாண சபைகள் தமது அங்கீகாரங்களை வழங்கியி ருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நேற்று அறி வித்தார்.
திருமணப் பதிவுத் திருத்தச் சட்ட மூலம், கண்டிய திருமண மண நீக்க திருத்தச் சட்ட மூலம், முஸ்லிம் மண நீக்கத் திருத்தச் சட்ட மூலம் மற்றும் பிறப்புக்கள், இறப்புக்கள் பதிவு திருத்த சட்ட மூலம் ஆகியவற்றுக்கே மாகாண சபைகள் தமது அங்கீகாரங்களை வழங்கியிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
 
இது தொடர்பில் மேலும் கூறிய சபாநாயகர், இச் சட்ட மூல திருத்தங்கள் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 154 அ (5) (அ) ஆம் உறுப்புரையின் கீழ் ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டதுடன் 46 (அ) (2) (அ) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் மேற்படி சட்ட மூலம் தொடர்பான கருத்துக்களை 22-4-2013 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்போ அனுப்பி வைக்கும்படி மாகாண சபைகள் கேட்கப்பட்டன.
 
மேல், வட மேல், தென், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் மேற்படி சட்ட மூலத்தை பரிசீலித்ததன் பின்னர் இச் சட்ட மூலம் தொடர்பாக தமது அங்கீகாரத்தை தெரிவித்துள்ளன.
மத்திய மாகாண சபை மேற்படி சட்ட மூலத்திலுள்ள விடயங்கள் இணைப்புப் பட்டியலில் உள்ளடக்காமை காரணமாக மாகாண சபையில் இது தொடர்பாக கலந்துரையாட வேண்டிய தில்லை என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment