Monday, April 22, 2013

வட மாகாணத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்ள கிளையொன்று நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Monday, April 22, 2013
இலங்கை::வட மாகாணத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்ள கிளையொன்று நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகளை பண்முகப்படுத்தும் நோக்கில் இவ்வாறு புதிய கிளையொன்று வட மாகாணத்தில் நிறுவப்பட உள்ளது.
 
வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 9.00 மணியளவில் ஆட்பதிவு திணைக்களத்தின் கிளைக் காரியாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்தக் கிளைக் காரியாலயம் மூலம் நன்மை அடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்பதிவு திணைக்களத்தின் வட மாகாணத்திற்கான புதிய அலுவலகம் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது.
வவுனியா அரசாங்க அதிபர் அலுவலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகத்தின் பணிகள் இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர். மஹிந்த சிந் தனையில் கூறப்பட்டுள்ளவாறு அரச சேவையை பொதுமக்களுக்கு சமீபமாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளை மாகாண மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  இதன் முதற் கட்டமாக வட மாகாண அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள் ளதுடன் இதன் இரண்டாவது அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் ஸ்தாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான புதிய அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் மே மாதமளவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்திற்கான வட மாகாணத்தின் புதிய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்படுவதன் மூலம் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் முற்றிலும் நன்மையடையவுள்ளதுடன் தேசிய அடையாள அட்டைகளையும் துரிதமாகவும், சிரமம் இன்றியும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.  வட மாகாண ஆட்பதிவு திணைக்கள அலுவலகத்தின் மூலம் பின்வரும் சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். வட மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு கிடைக்கப்படும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் இந்த மாகாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதே போன்று வட பகுதியிலுள்ள பாடசாலை மூலம் விண்ணப்பிக்கப்படும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றவுடன் துரிதமாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆலோ சனைகள் வழங்கப் படவுள்ளதுடன் இது தொடர்பில் எதிர்நோக் கும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment