Monday, April 22, 2013

பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் ஷகிட் உல் ஹக் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்!

Monday, April 22, 2013
இலங்கை::பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் ஷகிட் உல் ஹக் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கையை வந்தடைந்துள்ளார்.அவருடன் மேலும் சில பிரதிநிதிகள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் கட்ட சந்திப்பில் கலந்துகொள்வதற்காகவே பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளின் முதலாவது கட்டம் கடந்த ஜனவரி மாதம் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் ஷகிட் உல் ஹக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் புதிய ஒத்துழைப்புகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார உறவுகளை விஸ்தரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
  

No comments:

Post a Comment