Monday, April 22, 2013

தேசிய, சர்வதேச சூழ்ச்சிகளிலிருந்து அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பாதுகாப்பதில் சகல மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Monday, April 22, 2013
இலங்கை::தேசிய, சர்வதேச சூழ்ச்சிகளிலி ருந்து அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பாதுகாப்பதில் சகல மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையை நவீன நாடாக கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை எரிச்சலுடனும் பொறாமையுடனும் நோக்குபவர்கள் தேசிய, சர்வதேச ரீதியில் உள்ளனர். அவர்கள் நாட்டின் உண்மை நிலையை அறிந்துகொள்வது அவசியமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
வெலிஓயாவில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்குக் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெலிஓயா மஹாவலி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
 
மக்கள் அன்று அரசாங்கத்திடம் கேட்டதெல்லாம் நாட்டைப் பாதுகாத்து நம்மைப் பாதுகாக்க பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு மட்டுமே. எனினும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் மக்கள் கடந்த காலத்தை மறந்து பல்வேறு வேண்டுகோள்களை முன்வைக் கின்றனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஏனெனில் இது மக்களின் இயல்பான சுபாவம்.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தமது வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய வேண்டுகோள்களை முன்வைக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. இந்த வகையில் ஜனாதிபதி அவர்கள் யுத்தம் முடிவுற்றதின் பிரதிபலனை சகல மக்களும் அனுபவிப்பதற்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஒரு பிரதேசம் என்னில்லாமல் சகல பிரதேசங்களினதும் முன்னேற்றத்திற்கு ஜனாதிபதி வழிவகுத்தார். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அவர் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார். பெருமளவு நிதியினை செலவிட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
 
இதனை பலர் மறந்து செயற்படுகின்றனர். தேசிய ரீதியிலும் சர்தேச ரீதியிலும் இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களென சகல இன, மத மக்களுக்கும் சேவைகளைத் திட்டமிட்டு வழங்கிய பெருமை ஜனாதிபதி அவர்களையே சாரும்.
2014ல் கிவுல்ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பித்து வெலிஓயா மக்களின் நீர்ப்பாசனத் தேவைகள் நிறைவு செய்யப்படும். இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment