Saturday, April 20, 2013

இலங்கை தூதரகம் மாற்றமா? மறுக்கிறார் மந்திரி வயலார்ரவி!

Saturday, April 20, 2013
சென்னை::சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றப்படும் என்ற தகவல் தவறானது ' என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில், 24 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில், 20 லட்சம் பேருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், 4 லட்சம் இந்தியர்களுக்கு மட்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
 
மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, 2 லட்சம் பேரின் பிரச்னையை தீர்க்கப்பட்டது. மீதமுள்ள, 2 லட்சம் பேருக்கு மட்டும் பிரச்னை உள்ளது. அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக சென்று, அங்கு குடியேறியவர்கள். அவர்களின் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
நம் நாட்டு தூதரக அதிகாரிகளின் மூலம், அரபு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. வெகுவிரைவில் அப்பிரச்னை தீர்க்கப்படும். அதேநேரத்தில், முறையான ஆவணங்கள் இல்லாமல், போலி ஏஜென்ட்களை நம்பி, வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
 
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை கேரளாவிற்கு மாற்ற இருப்பதாகவும், அதற்கு அம்மாநில முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் ,முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment