Monday, April 22, 2013

இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும்: திருமாவளவன்!

Monday, April 22, 2013
சென்னை::இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளதையும், இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பகே என்பவர் இலங்கைக் கடற்படையினரில் 80 சதவீதம் பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்று கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியவர்,
 
இது தமிழக மக்களைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவோடுதான் நடத்தப்படுகிறதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய அவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ள திருமாவளவன், “இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment