Sunday, April 28, 2013
இலங்கை::காமன்வெல்த் மாநாடு, திட்டமிட்டபடி, இலங்கையில் நடக்கும். மாநாட்டை, வேறு
நாட்டுக்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை' என, மாநாட்டு ஏற்பாட்டு குழு,
தெரிவித்துள்ளது.
வரும் நவம்பரில், காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பங்கேற்கும் மாநாடு,
இலங்கையின், ஹம்பன்தோட்டாவில் நடத்தப்படும்' என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால்,
இந்த மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு, கனடா உள்ளிட்ட சில நாடுகள், கடும்
எதிர்ப்பு தெரிவித்தன. "இலங்கையில், மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. போரால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எந்த நிவராண பணியையும், இலங்கை அரசு
செய்யவில்லை.
எனவே, காமன்வெல்த் மாநாட்டை, வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும். மாற்றவில்லை எனில், இந்த மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்' என, கனடா, எதிர்ப்பு தெரிவித்தது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகளும், இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆஸ்திரேலிய பிரதமர், மால்கம் பிரேசரும், "இலங்கையில் மாநாட்டை நடத்தக் கூடாது. வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும்' என, நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, காமன்வெல்த் மாநாட்டு ஏற்பாட்டு குழு கூட்டம், லண்டனில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, காமன்வெல்த் மாநாட்டு ஏற்பாடு குழு செயலர், கமலேஷ் சர்மா கூறியதாவது: காமன்வெல்த் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதென்பது, தற்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 2009ம் ஆண்டிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டது; 2011ல், இந்த முடிவு, உறுதி செய்யப்பட்டது.
எனவே, மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. வரும் நவம்பரில், திட்டமிட்டபடி, இலங்கையின் ஹம்பன்தோட்டாவில் மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு, கமலேஷ் சர்மா கூறினார்.

No comments:
Post a Comment