Sunday, April 28, 2013

ரணிலின் பொறுப்பற்ற செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது+(புலி ஆதரவு) பிரிவினைவாத சக்திகளுடன் சேர்ந்து நாட்டின் அபிவிருத்தியை சீரழிக்கிறார்- அரசியல் அவதானிகள் விசனம்


Sunday, April 28, 2013
இலங்கை::ரணிலின் பொறுப்பற்ற செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது++(புலி ஆதரவு) பிரிவினைவாத சக்திகளுடன் சேர்ந்து நாட்டின் அபிவிருத்தியை சீரழிக்கிறார்- அரசியல் அவதானிகள் விசனம்!
 
வடக்கில் மீள் குடியேற்றம், வீடமைப்பு, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு போன்ற நற்பணிகள் புரியும் இராணுவத்தினர் மீது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தவறு. அவரது இக் கருத்துக்களை வட பகுதி மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
 
மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பது நல்லது. ஆனால் அதனை சரிவர நிறைவேற்றுவதற்கு அவரோ அல்லது அவரது கட்சியோ உருப்படியான எந்தவொரு ஒத்துழைப்பையும் அரசுக்கு இதுவரை வழங்கவில்லை.
 
இலங்கைக்கு எதிராக செயற்படும் வெளிநாட்டு சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் வட பகுதிக்குச் சென்று கோமாளித்தனமாக கூறுவதை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றுமே அங்கீகரிக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
எதிர்கட்சித் தலைவர் நாட்டின் பொறுப்பு மிக்க பதவியை வகிக்கும் ஒருவர், அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரங்களை அரசியல் ரீதியில் செய்து, தனது கட்சிக்கு மக்கள் ஆதரவைப் பெருக்கி அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கும் எண்ணத்துடனேயே எந்தவொரு நாட்டிலும் எதிர்கட்சித்தலைவர் தீவிரமாக செயற்படுவார்.
 
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு நாட்டை துண்டாடுவதற்கு தமிழ்த்தேசியக் ரகூட்டமைப்புடனும் ஏனைய பிரிவினைவாத சக்திகளுடனும் இணைந்து இப்போது நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் திருகுதாளத்தை நாட்டுப்பற்றுடைய எந்தவொரு பிரஜை யாலும் ஏற்க முடியாது.
 
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான சூழ்நிலை இன்று உருவாகிக் கொண்டிருப்பதனால், ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு தன்னுடைய விரல்விட்டு எண்ணக்கூடிய கையாட்களுடன் சென்று வருகிறார். அவர் வடபகுதியில் தனது கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தை நடத்தினால் எவரும் அவர் மீது குற்றம் சொல்ல முடியாது. அதற்கு பதில் அவர் வடபகுதிக்கு சென்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இராணுவத்தினர் மீதும், அரசாங்கத்தின் மீதும் சுமத்தி மக்கள் மனதில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வதை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது.
 
உதயன் பத்திரிகை எங்கள் நாட்டிலுள்ள ஒரு தினசரியாகும். அப்பத்திரிகை காரியாலயத்தை இனந்தெரியாதோர் வந்து தாக்கி, அதன் ஒரு பகுதியை தீயிட எத்தனித்த முயற்சியை பத்திரிகை சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய உன்னத நோக்கத்துடன் செயற்படுபவர்கள் எவரும் கண்டிக்க தவறவில்லை.
 
ரணில் விக்ரமசிங்கவும் அதுபோன்று உதயன் காரியாலயத்திற்கு சென்று அதன் ஆசிரியர் மற்றும் உரிமையாளர்களுடன் பேசி அந்த சம்பவத்துக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தால் அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்க அங்கு சென்று உதயன் பத்திரிகையை அரசாங்கமும், இராணுவத்தினருமே தாக்கினார்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி அதற்கு சர்வதேச ரீதியில் பிரசாரத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சி தவறானது.
 
ஒரு எதிர்கட்சித்தலைவர் விரும்பினால் அரசாங்கத்தை எதிர்க்கலாம். ஆனால், அவர் தேசத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய இத்தகைய தவறான கருத்துக்களை வெளியிடுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
எதிர்கட்சித் தலைவர் எப்போதுமே இராணுவத்தை தூற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறாரே ஒழிய, இராணுவத்தினர் வடபகுதி மக்களுக்கு செய்யும் பணிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச தயக்கம் காட்டுகிறார்.
மக்களை மீள் குடியேற்ற வேண்டுமென்று அவர் பகிரங்கமாக அறிவிப்பது நல்லது. ஆனால் அதனை சரிவர நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சித் தலைவரோ அவரது கட்சியோ உருப்படியான எந்தவொரு ஒத்துழைப்பையும் அரசாங்கத்துக்கு வழங்கவில்லை.
 
இராணுவத்தினர் மக்களை மீள்குடி யேற்றுவதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருக்கின்ற நிலக்கண்ணி வெடிகளையும், மிதி வெடிகளையும் அகற்றும் பணி இப்போது வடபகுதியில் வெற்றிகரமான முறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பல பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதனால் தான் இப்போது இடம்பெயர்ந்த மக்களின் பெரும்பகுதியினரை தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
அடுத்தபடியாக யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த சுமார் 12ஆயிரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்த பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று எவ்வித அவப்பெயரும் இன்றி சுதந்திர மனிதராக வடபகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இராணுவத்தினர் எடுத்த முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் ரணில் விக்ரமசிங்க அதனைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டும்.
 
இந்த 12ஆயிரம் பேரில் புனர்வாழ்வ ளிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு வாழ்வாதாரங்களை இராணுவத்தினர் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு சுய தொழில் ஆரம்பிப்பதற்கான வங்கிக் கடனை பெற்றுக் கொடுத்திருப்பதுடன் கடற்றொழில் செய்வதற்கு படகுகள், இயந்திர உபகரணங்கள், வலைகளும் விவசாயம் செய்வதற்கு இரண்டு சக்கர, நான்கு சக்கர உழவு இயந்திரங்களும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
பயங்கரவாத யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களில் ஒன்று கிளிநொச்சியாகும். இந்த மாவட்டத்திலுள்ள 100 ஏழை இளம் பெண்களை இராணுவத்தினர் தங்களின் பெண்கள் மகளிர் தொண்டர் இராணுவப் படையில் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு இப்போது இராணுவம் 32ஆயிரம் ரூபா சம்பளத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு உணவு, சீருடை, தங்குமிட வசதி, வைத்திய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேலும் 18ஆயிரம் ரூபாவை செலவிடுகிறது.
 
இவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள 20பேருக்கு இராணுவம் தனது செலவில் 5இலட்சம் ரூபா செலவுக்கான கட்டிடப் பொருட்களையும், தளபாடங்களையும் வாங்கி சுமார் 10இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு அழகான வீட்டை நிர்மாணித்துள்ளது. இந்த வீடுகளின் நிர்மாணப் பணியை இராணுவத்தினரே ஏற்றுள்ளார்கள்.
இவ்விதம் கிளிநொச்சி போன்ற பெரும்பான்மை ஏழைமக்கள் வாழும் ஒரு மாவட்டத்தில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களை வாழவைக்கும் ஒரு தன்னலமற்ற பணியை செய்து வருகிறார்கள்.
 
இந்த நற்பணிகளை புரியும் இராணுவத்தினர் மீது எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோமாளித்தனமாக வெளிநாட்டில் உள்ள இலங்கைக்கு எதிரான சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்துவதை வடபகுதியில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றுமே அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் புத்திஜீவிகளும் அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டு கின்றனர்
 

No comments:

Post a Comment