Sunday, April 28, 2013
கனடா::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தவறான சம்பவங்கள் இடம்பெற்றதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினரும் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் முழு அளவிலான விசாரணை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்தற்காக லண்டன் சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அர்த்தமுள்ள நல்லிணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமான என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமை போன்றவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment