Wednesday, April 10, 2013

மனித உரிமை பேரவைக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க அரசு தயாரில்லை: பூரண சமாதானம் நிலவும் நாட்டில் பிரச்சினை இருப்பதாக கூறி தலையீடுசெய்ய சில சக்திகள் முயற்சி: ஜீ. எல். பீரிஸ்!

Wednesday, April 10, 2013
இலங்கை::ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்பதி ல்லை என்ற எமது நிலைப்பாட்டில் மாற் றம் கிடையாது. அதில் குறிப்பிடப்பட் டுள்ளவாறு 6 மாதத்திற்கு ஒரு தடவை மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவா பிரேரணையை முன்னெடுப்பது குறித்து இலங்கையிலோ, ஜெனீவாவிலோ அல்லது வேறு நாட்டிலோ பேச்சு நடத்தப்படவில்லை எனவும் எந்த நாட்டின் ஆலோசனையையும் ஏற்கத் தயாராக இல்லை என வும் அவர் குறிப்பிட்டார்.
 
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பிய கவன யீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது :-
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையை அவமதிக்க எதிர்க்கட்சித் தலைவர் முயல்கிறார். நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம். மேலும் பலவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். யுத்தம் முடிவடைந்து சில காலமே முடிந்துள்ளது. அதனால் ஜெனீவா பிரேரணையை ஏற்க முடியாது. எமது முடிவை தெளிவாக கூறியுள்ளோம்.
 
ஜெனீவா பிரேரணையினூடாக 6 மாதத்திற்கு ஒரு தடவை இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நடைபெறும் 24ஆவது மனித உரிமை பேரவை மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இதனுடன் பிரச்சினை தீர்ந்து விடாது. இது ஒவ்வொரு அமர்விலும் தொடரும்.
6 மாதத்துக்கு ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிக்க எமது அரசாங்கம் தயாராக இல்லை. எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் கிடையாது. எமது நாட்டை இலக்கு வைத்து பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமாதானம் நிலவும் நாட்டில் பிரச்சினை இருப்பதாக கூறி தலையீடு செய்ய முயல்கின்றனர்.
 
அமெரிக்க மனித உரிமை ஆணையாள ரின் அறிக்கையை ஆராயவும் அமெரிக்க தலையீட்டை அனுமதிக்கவும் கோரப்பட் டுள்ளது. இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தவும் ஜெனீவா பிரே ரணையினூடாக கோரப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக நிராகரித்துள் ளோம்.
தருஸ்மன் அறிக்கை குறித்தும் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தருஸ்மன் அறிக்கையை ஆபிரிக்க நாடு களும் முஸ்லிம் நாடுகளும் நிராகரித்துள் ளன. இதில் பெயர் குறிப்பிடப்படாத நம்பகத்தன்மையற்ற சாட்சிகளே இடம் பெற்றுள்ளன.
 
மனித உரிமை பேரவையில் நிறைவேற் றப்பட்ட இலங்கை தொடர்பான பிரே ரணை குறித்த எமது நிலைப்பாட்டில் சிறிய மாற்றமும் கிடையாது.
இந்தப் பிரேரணையினால் உலக நாடுகளுக்கும் மனித உரிமை பேரவை நாடுகளுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கிரிக்கெட், சினிமா என்பவற்றிற்குள்ளும் புகுந்துள்ளது.
ஜெனீவா பிரேரணை குறித்து எங்கும் பேச்சு நடத்தப்படவில்லை. எந்த நாட்டின் ஆலோசனையும் எமக்குத் தேவையில்லை.
 
நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் சிக்கலான சிபார்சுகளும் உள்ளன. காணி விவகாரம் சிக்கலானது. சில சிபார்சுகளுக்கு கால அவகாசம் தேவை. ஒரே இரவில் தீர்க்க முடியாது என்றார்.
இதன்போது பேசிய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மிதிவெடி அகற்றல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகள் முழுமை யாக செயற்படுத்த வேண்டும். அமெரிக்கா வுடன் உடன்பாட்டுடன் அரசு செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment