Wednesday, April 10, 2013

அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டி: "மாஜி' அதிபர் கிளிண்டன் தகவல்!

Wednesday, April 10, 2013
வாஷிங்டன்::வரும், 2016ல், நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார்,'' என, அமெரிக்க முன்னாள் அதிபரும், ஹிலாரியின் கணவருமான பில் கிளிண்டன் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர், ஒபாமாவின் முந்தைய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் ஹிலாரி கிளிண்டன். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபரானதும், உடல் நிலையை காரணம் காட்டி, அமைச்சர் பதவியில் தொடர மறுத்து விட்டார். இதையடுத்து, ஜான் கெர்ரி, வெளியுறவு அமைச்சராக உள்ளார்.
 
வரும், 2016ல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற தகவல்கள் பரவின. இதை அவரது கணவர் உறுதிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து, பில் கிளிண்டன் குறிப்பிடுகையில், ""அமெரிக்க அதிபரைத் தேர்ந்தடுப்பதில், அமெரிக்க மக்கள் மிகவும் திறமையானவர்கள். 2016ல், நடைபெற உள்ள தேர்தலில், ஹிலாரி போட்டியிட வாய்ப்பு உள்ளது,'' என்றார். கிளிண்டன் சூசகமாகக் கூறியதை, ஹிலாரி மறுக்கவும் இல்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை.

No comments:

Post a Comment