Friday, April 26, 2013
இலங்கை::இரத்தினபுரி பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத ஒருவர் தொலைபேசியூ
டாக தொடர்பினை ஏற்படுத்தி தாம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததாக பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக்கொள்ளுமாறு குறித்த நபர் மிரட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.
இந்த கொலை மிரட்டல் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இரத்தினபுரி நகரில் நீண்டகாலம் நடத்திச் செல்லப்பட்ட கெரொகே களியாட்ட விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்ட சம்பவத்திற்கும் கொலை மிரட்லுக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment