Friday, April 26, 2013

அமெரிக்கா பொஸ்ட்டன் குண்டு வெடிப்பை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு கூடாது :வேந்திரசில்வா!

Friday, April 26, 2013
இலங்கை::பொஸ்ட்டன் குண்டு வெடிப்பை பாடமாக கொள்க - இலங்கை:
 
அமெரிக்காவின் பொஸ்ட்டன் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பத்தை கருத்தில் கொண்டேனும்,  புலிகள் இயக்கத்தை அழித்த இலங்கை தலைவர்களையும், இராணுவத்தினரையும் யுத்தக்குற்றவாளிகளாக பார்க்கப்படுவதை நிறுத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளது. 
 
அமெரிக்கா – நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பொஸ்ட்டனில் இடம்பெற்று குண்டு வெடிப்பு சம்பவம் அமெரிக்கர்களுக்கு புதிது எனினும், இலங்கையர்களுக்கு அது புதிதல்ல.
கடந்த 30 வருடங்களில் இவ்வாறான பல்வேறு சம்பவங்களுக்கு இலங்கையர்கள் முகம் கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் அமெரிக்கா பொஸ்ட்டன் குண்டு வெடிப்பை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment