Friday, April 26, 2013
இலங்கை::புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கைக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கொழும்பில் நடத்திய விசேட வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800ம் ஆண்டு வரையான கால கட்டம் வரை நீண்டு செல்கிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் கொனசல் ஜெனரல் காலி கோட்டை விடுதியின் வரபேற்பறையில் இருந்தாராம். அவர் அங்கிருந்து அமெரிக்காவின் கப்பல்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
எனினும் தற்போது நாம் 21ம் நூற்றாண்டில் உள்ளோம். அப்போதைய காலத்தை விட அமெரிக்க தூதரகத்தின் பணிகள் அதிகரித்துள்ளன.
இலங்கையுடனான உறவுகள் அன்றைய காலத்தை விட மிகவும் ஆழமானதாக உள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளையும், சமூக மற்றும் கல்விக்கான உதவிகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.
இலங்கைக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா உதவி வருகிறது. 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது, அமெரிக்கா உடனடியாக தனது போர் கப்பலை அனுப்பியது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கை மக்களையும் அதில் இருந்து மீட்க பாரிய உதவிகளை செய்ததது.
ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவைக் கூட கொலை செய்த புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது.
அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ள நாடு என்ற வகையில், பயங்கரவாதம் காரணமாக நாட்டில், சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்துள்ளது.
புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் வேலைத்திட்டத்தின் அதிகளவான பங்கு அமெரிக்காவே வகித்தது. இந்த தடைக்காரணமாக புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் கிடைக்கும் வலையமைப்பை முடக்கவும் அதனை முடிவுக்கு கொண்டு வரவும் முடிந்தது.
புலிகள் அமைப்பு இன்னும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் சவாலை நாம் அறிந்துள்ளோம். அதேபோல், முக்கியமான விடயமாக சிரமமான சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் முன்னெடுத்துச் செல்லும் சவாலும் மிகவும் முக்கியமானது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், போர்க்குற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவது தாமதப்படுத்தப்படுமாயின், இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போரில் ஈடுபடாலம்.
ஜனநாயகத்தை மதிப்பை பாதுகாப்பதன் ஊடாகவே இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால வலுவான இணைப்பு காணப்பட்டது. அவ்வாறான ஜனநாயக மதிப்பு சவாலுக்கு உட்படும் போது, அதற்கான அமெரிக்கா குரல் கொடுக்கும்.
ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும் நாடாகும். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டனர். அதேபோல் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை.
2009ம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை, 2010 ஹெக்நேலியகொட காணாமல் போனமை, 2011 ஆம் ஆண்டு உயதன் பத்திரிகை ஆசிரிய ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் என்பன இவ்வாறான சம்பவங்களாகும்.
முழு உலகத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறது என்பதை எடுத்து கூறுவதற்காகவே இந்த சம்பவங்கள் குறித்து உங்கள கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் உள்ள நாட்டில் அரசாங்கம் ஒன்று செயற்படும் விதத்தையும் அதன் நிலைமைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. அத்துடன் அந்த உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இது பிரஜைகளின் சட்டரீதியான மனித உரிமை எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment