Saturday, April 13, 2013

ராஜிவ் கொலை குற்றவாளிகள் அறிவாற்றல் தமிழ் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் ’- (புலிபினாமி) கருணாநிதி!

Saturday, April 13, 2013
சென்னை::ராஜிவ் கொலை குற்றவாளிகள் அறிவாற்றல் தமிழ் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் ’- (புலிபினாமி) கருணாநிதி!
 
முன்னாள் பிரதமர் ராஜிவை கொலை செய்த குற்றவாளிகள் 3 பேர் மரணத்தண்டனையை குறைத்து அவர்களுக்கு வாழ்வளித்து அவர்களின் அறிவாற்றல் தமிழ்ச்சமுதாயத்திற்கு (புலிகளுக்கு) பயன்படுத்த முன் வர வேண்டும் என தி.மு.க., தலைவர் (புலிபினாமி) கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது: புல்லார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு , தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பலருடைய மனதிலும், நமது எண்ணத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தண்டனையை அறவே ரத்து செய்து சட்டபுத்தகத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க.,வின் நிலைப்பாடு.
ராஜிவ் கொலை குற்றவாளிகள் செய்த குற்றம் மிகப்பெரியது என்றாலும், அவர்கள் அநுபவித்த நீண்ட கால தண்டனையை நினைத்து மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் தண்டனையை குறைக்க முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருணை மனு தாமதம் மற்றும் 20 ஆண்டு சிறைவாசம் அநுபவிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் தண்டனையை குறைக்க தி.மு.க., தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்களின் முயற்சியால் நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது. இது போல் இன்னும் 3 பேர்களின் விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தி.மு.க, காலத்தில் தியாகு , கலியபெருமாள் தண்டனை குறைக்கப்பட்டு அவர்கள் தற்போது எழுத்தாளராகவும், படைப்பாளராகவும் உலவுவதை பார்க்க முடிகிறது. இது போன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியாருக்கும் வாழ்வளித்து அவர்கள் அறிவாற்றலை தமிழ்சமுதாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
தீர்மானம் நிறைவேற்றுக :

 
இந்த பிரச்னையில் தமிழக அரசு மனித நேயத்தோடு, உண்மையுடன் அணுக வேண்டும். தமிழக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 3 பேர் உயிர்கள் காக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி புல்லார் மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. கருணை மனு மீதான ஜனாதிபதியின் முடிவு எடுப்பதில் தாமதம் என்ற காரணத்திற்காக மரணத்தண்டனையை குறைக்க முடியாது என தனது தீர்ப்பில் கூறியது நினைவிருக்கலாம்.
 
-----------------------------------------------------------------------------------------------------
Comment *வாசகர் கருத்து
 
 
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - ,இந்தியா
13-ஏப்-201317:58:39 IST Report Abuse
Ramasami Venkatesan கொலை குற்றம் செய்தவர்கள் எல்லோரும் அறிவாற்றல் பரிமாறினால் தமிழ் இலக்கியம் நிச்சயம் மேம்பட்டுவிடும். என்னே அறிவாற்றலான யோசனை. இப்போதே இலங்கையருடன் ஒன்றி வாழும் தமிழ் இன மக்கள் (தமிழர்கள் இல்லையோ) - ஈழ தமிழர்கள் மட்டும்தான் தமிழர்களா - படும் பாடு படித்துக்கொண்டிருக்கிறோம். கொலையாளிகளின் கொலை அறிவாற்றலை புத்தகமாக வெளியிட கூட ஒத்துழைப்பார் போலும்.
 
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
13-ஏப்-201317:53:50 IST Report Abuse
Uthukkaattaan இலங்கை தமிழர்களையும் விடுதலை புலிகளையும் ஒன்றாக பார்ப்பது எவருக்கும் நன்மை பயக்காது. சாதாரண மக்கள் மீது போர் குற்றங்களை ஏவி விட்டதையும் விடுதலை புலிகளை ஆதரிப்பதையும் ஒன்றாக பார்க்க முடியாது. பல ஆன்றோர்கள் இலங்கை சுதந்திரம் ஆகும் சமயத்திலேயே இலங்கை மக்கள் அனைவரும் இந்திய வம்சாவழியினர் ஆனாலும் பிற்காலத்தில் இந்தியாவை எதிர்ப்பார்கள் ( தமிழரும் சிங்களரும் சேர்ந்து) என்று சிந்தித்திருக்கிறார்கள் .புலிகளின் தலைவர் IPKF சென்ற சமயத்தில் சிங்களரும் நாங்களும் ஒரே இனம் வெளி நாட்டினர் எங்கள் சமாதனத்திற்காக தேவையில்லை என்று பகிரங்கமாக இந்தியாவை எதிர்ப்பவர்கள். IPKF புலிகள் நோக்கம் சமாதானம் ஆழ என்று உணர்ந்து திரும்பியபோது கேலி செய்தவர்கள் அவர்கள். அவர்கள் மதிநுட்பம் நமக்கு எதற்கு தேவை. ஆயுத கடத்தலுக்கு, சிறுவர்களை கேடயமாக்கி போர் புரிய , தமிழ் இன சமாதான் பிரியர்களை தூக்கத்திலும், அதிகாலையில் எழுப்பியும் , குடும்பத்துடனும், நிராயுதபாணிகளாக உள்ளபோதும் வெடி வைத்து சின்னா பின்னமாக்க. நன்றாக யோசித்து பாருங்கள் . இலங்கை தமிழர்கள் என்ற போர்வையில் புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் எதோ ஒரு விதத்தில் புலிகளால் ஆதாயமடைந்து இருப்பவர்கள். எதையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் JJ அரசு புலிகளின் ஆதரவு போக்கை உடனடியாக தடுக்கா விட்டால் தமிழ்நாடு சுடுகாடாக்கி விடும் , ஏனெனில் அவர்கள் பருப்பு இப்போது இலங்கையில் வேகாது.
 
Tamilselvan - Chennai,இந்தியா
13-ஏப்-201317:46:42 IST Report Abuse
Tamilselvan நமது நாட்டின் தலைவரையும்,பல அப்பாவி தமிழர்களை கொன்ற புலி ஈனர்களின் தீவிரவாத அறிவாற்றல் நமக்கு தேவை இல்லை. அவர்களை இருபது ஆண்டுகாலம்,மக்களின் பணத்தில் வாழ வைத்தது பெரிய தவறு.இவர்கள் செய்த பெரிய கொடூரமான கொலை செயலுக்கு,உண்டான பரிசை உடன் கொடுக்க வேண்டும். இது போன்ற தீவிர வாதத்திற்கு,ஆதரப்பவர்களையும் நமது நீதி துறை வன்மையாக கண்டிக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் அவர்களை ஆதரித்தால்,ஆதரிப்பவர்களுக்கும் கடும் தண்டனை வேண்டும். அப்போதுதான் தீவிரவாதம் நமது நாட்டில் இருந்து ஒழியும்.
 
G.Prabakaran - Chennai,இந்தியா
13-ஏப்-201317:35:04 IST Report Abuse
G.Prabakaran ஐயா கலைஞரே, இன்னும் எவ்வளவு காலம் தான் தமிழ் இன உணர்வை தூண்டி விட்டு இப்படி சம்பந்தில்லாமல் அவர்கள் ஏதோ மாபெரும் அறிஞர்கள் விஞ்ஞானிகள் போன்று அவர்கள் அறிவாற்றல் பயன்பட வேண்டும் என உளறிக்கொண்டிருப்பீர். நீங்கள் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரையினை ஒரு முறை படித்து விட்டு கருத்து கூறவும்.
 
Pats - Coimbatore,இந்தியா
13-ஏப்-201317:34:50 IST Report Abuse
Pats கருணாநிதியின் அறிக்கையில் சுய தம்பட்டம் இல்லாமல் இருக்காது என்பதற்கு உதாரணம் - "எங்களின் முயற்சியால் நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது. தி.மு.க, காலத்தில்த்தான் தியாகு, கலியபெருமாள் தண்டனை குறைக்கப்பட்டது". ஒருவேளை ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து மூவரின் தண்டனை குறைக்கப்பட்டாலும் - "மத்திய அரசின்மீது நாங்கள் ஏற்படுத்திய நெருக்குதலால்தான் வெற்றி கிடைத்தது" என்று சொல்லுவார். ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தோல்வி அடைந்தால், "ஜெயா அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் மூவரையும் காப்பாற்ற முடியாமல் போனது" என்று குற்றம் சொல்வார்.
 
 
S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா
13-ஏப்-201317:20:25 IST Report Abuse
S. MURALIDHARAN ஒரு தப்பும் பண்ணாம, சிறைக்கு வெளியே இருக்கிற எல்லாருடைய சாதாரண அறிவையும் பிரமாதமா பயன்படுத்தி இந்தியாவை 'டாப்'புக்கு கொண்டு வந்துட்டோம் இன்னும் சிறைக்குள்ள இருக்கிறவங்களோட அசாதாரண அறிவு மட்டும்தான் நாட்டுக்குப் பயன்படாம இருக்காக்கும் ராஜீவுக்ககாகப் பயன்படுத்தப்பட்ட இந்த ஸ்பெஷல் அறிவாற்றல் இன்னும் யாருக்காக பயன்படணும்னு நினைக்கிறாரோ, தெரியலையே ஆண்டவா, இந்தியாவை இந்த வக்கிரமான அரசியல்வாதிகள்கிட்டருந்து காப்பாத்துப்பா
 
Rajasekar - New Delhi,இந்தியா
13-ஏப்-201317:08:34 IST Report Abuse
Rajasekar இப்பொழுதெல்லாம் உழைக்க மறுப்பவர்கள் கொலை குற்றம் செய்யாமல் திருட்டு சிறு சிறு கொள்ளை சம்பவங்கள் செய்து கிடைக்கும் பணத்தில் பொழுதை கழிக்கிறார்கள். மாட்டிக்கொண்டால் கொஞ்சம் தர்ம அடி அப்புறம் நிம்மதியாக ஜெயில் வாழ்க்கை 3 வேலை சாப்பாடு, வாரம் 2 முறை அசைவம், முட்டை என்று. பிறகு ஓரிரு மாதத்தில் விடுதலை.... கொலைகுற்றத்திர்க்கு மரண தண்டனை இல்லை என்றால் ஒரு 3 அல்லது 4 பேரை போட்டு தள்ளிட்டு நிம்மதியா ஜெயில்ல செட்ல் ஆகிருவாங்க.... அப்புறம் நீங்க என்னபன்னுவீங்க கொலைக்குற்றம் செய்து சிறையில் வாடுவோருக்கும் ஓட்டுரிமை வேண்டும்னு போராடுவீங்க..... அரசியல் வாதிகள் எப்படியும் காலம் தள்ளலாம் எங்க பிழைப்பு தான் நார பிழைப்பு...

No comments:

Post a Comment