Sunday, April 14, 2013

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, நாகை மீனவர்களைச் சுற்றி வளைத்த, இலங்கை கடற்படையினரிடம் இருந்து, 46 மீனவர்கள் மீட்பு!

Sunday,April, 14, 2013
நாகப்பட்டினம்::நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, நாகை மீனவர்களைச் சுற்றி வளைத்த, இலங்கை கடற்படையினரிடம் இருந்து, 46 மீனவர்கள் மீட்பு!
 
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, நாகை மீனவர்களைச் சுற்றி வளைத்த, இலங்கை கடற்படையினரிடம் இருந்து, 46 மீனவர்களையும், இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த, 18 மீனவர்கள், நாகூரைச் சேர்ந்த, 28 மீனவர்கள் என, 46 மீனவர்கள் ஐந்து படகுகளில், கடந்த, 8ம் தேதி, மீன்பிடிக்கச்
 
சென்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை, இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து, மீன்பிடி வலைகளை கடலில் வெட்டி விட்டு, ஐந்து படகுகளையும் இலங்கை கடல் பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
இத்தகவலை, நாகை மீனவர்கள், "வாக்கி டாக்கி' மூலம், இந்திய கடலோர காவல் படையினருக்கு தெரிவித்தனர். இந்திய கடலோர காவல் படையினர், இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டனர்.
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த மீனவர்களை விடுவிக்குமாறு பேச்சு நடத்தி, 46 மீனவர்களையும், ஐந்து படகுகளையும் மீட்டு, நேற்று காலை, காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

No comments:

Post a Comment