Saturday, April 13, 2013

உதயனை உதயனே தாக்கியது – அரசாங்கம்?:அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்!


Saturday, April 13, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் - உதயன் பத்திரிகையின் பிரதான அலுவலகத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாண பிரதி காவற்துறை பொறுப்பதிகாரி தலைமையிலான குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
காவற்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இன்று அதிகாலை 4.45 அளவில் விநியோக பணிகள் இடம்பெற்றிருந்த வேளையில் பத்திரிகை அலுவலகத்துக்குள் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.
 
துப்பாக்கிகளை காட்டி பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தியதுடன்அலுவலகத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டு அச்சு இயந்திரத்தை தீமூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இது தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில் உதயன் பத்திரிகை உள்தரப்பினராலேயே தீ வைக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் நற்பெயருக்கு கழங்கம் விளைவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் பதிலளித்த உதயன் பத்திரிகையின் உரிமையாளரும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஏன் இன்னும் விசாரணை நடத்தவில்லை என்ற கேள்வி எழுப்பினார்.
 
உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றுஇ இராணுவம் தெரிவித்துள்ளது.
 
இராணுவத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்துக்கும்இ இராணுவத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில்இ சிலர் இந்த தாக்குதல் சம்பவத்துடன் இராணுவத்தினரை தொடர்பு படுத்துவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment