Tuesday, April 23, 2013

இன முறுகள் ஏற்படாத வகையில் யுத்தத்தினால் கைவிடப்பட்ட காணிகள் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்!

Tuesday, April 23, 2013
இலங்கை::இன முறுகள் ஏற்படாத வகையில் யுத்தத்தினால் கைவிடப்பட்ட காணிகள் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொருளாதாரப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

தற்போது மாவட்டத்தில் நிகழும் காணிப்பிரச்சனை தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் இடம்பெற்ற போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த யுத்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது சொந்தக் காணிகளை விட்டு வெளிவேறிய சகல பொது மக்களினதும் சொந்தக்காணிகளை தற்போது அக்காணிகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாவிட்டால் மீண்டும் அக்காணிகளை இன முறுகல் ஏற்படாதவாறு மீள ஒப்படைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பொருளாதாரப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வாகரைப் பிரதேச செயலகப்பிரிவின் காரமுனை மற்றும் ஆனைசுட்டமடு ஆகிய பிரதேச மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக அதிக கவனம் எடுக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பிரதேச மக்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் தங்கள் பிரச்சனைகளை முன் வைத்ததனையடுத்து அது தொடர்பாக உடனடி நடவடிக்ககை எடுக்கப்படும் எனவும் முதற்கட்டமாக அப்பிரதேச மக்களின் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுத் தருவதாக பிரதேச மக்களிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்ததாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முஹம்மட் சஜி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுல நாயகி, பிரதி அமைச்சரின் செயலாளர் முஹம்மட் ருஸ்வின் உட்பட அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment